ALTEC IT SOLUTIONS வழங்கும்.! PHP ஒரு அறிமுகம்.-1
Php என்பது server side script language ஆகும்.
இது ஒரு கட்டற்ற மென் பொருள் .
(open source software).
நிறைய database களை ஆதரித்தாலும் mysql உடன் அதிகம் பயன் படுத்தப்படுகின்றது.
Php files என்பது html மற்றும் script ஆகியவற்றின் கலவையாகும்.
<HTML>
<HEAD>Sample PHP Script</HEAD>
<BODY>
The following prints “Hello, World”:
<?php
print “Hello, World”;
?>
</BODY>
</HTML>
மேலே உள்ள நிரலில் <?php மற்றும் ?> இடையே உள்ள வரிகள் php interprter ல் இயக்கப்பட்டு plain html ஆக மாற்றப்ப்ட்டு பின் கீழ் வரும் படி வெளியீடு செய்யப்படுகின்றது.
The following prints “Hello, World”:
Hello, World
Php மொழியானது பெரும் பாலும் c மொழியின் இலக்கணத்தை ஒத்து வருவதால் புதியவர்களால் எளிதாக கற்க முடியும்.
Comments (குறிப்பு வரிகள்)
Comments ஆனது ஒரு நிரலின் இயக்கம் பற்றி நிரலாளரால் எழுதப்படும் வரிகளாகும். இவை interpreter ல் இயக்கப்படாது.
Phpல் single line comment
// this is a comment
அல்லது
#this is also a comment
என்றோ எழுதப்படுகிறது.
Multi line comments:
/* this is a
Multi
Line comment */
என்று /* மற்றும் */ இடையே எழுதப்படுகிறது.
மாறிகள்(variables)
Php ல் மாறிகள் weekly typed மாறிகளாக உள்ளது.
அதாவது மாறிகள் உபயோகிக்கும் முன் அறிவிக்கப்படுவதில்லை. அவை assign செய்யப்படும் மதிப்புகளுக்கு ஏற்றாற் போல் மாறிக் கொள்கின்றது.
எனவே தான் அவை weekly typed variables ஆக உள்ளது.
மாறிகளின் naming rules மற்ற மொழிகளைப் போலவே. எனினும் இது $ குறியீட்டுடன் ஆரம்பிக்கிறது. அதற்கு அடுத்து வருவது alphabet ஆகவோ அல்லது _(underscore) ஆகவோ இருக்கலாம். மற்ற எழுத்துக்கள் alphabet அல்லது numeric அல்லது underscore ஆக இருக்கலாம் space வரக் கூடாது. . முற்றுப் புள்ளி வரக் கூடாது.
இரண்டு வார்த்தைகளாக வரும் பொழுது underscore ( _ )ஆல் இணைக்கப்படலாம் அல்லது இரண்டாவது வார்த்தை capital letterல் ஆரம்பிக்கலாம்.
உதாரணம்:
$total_salary அல்லது $totalSalary.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.