டைபிங் செய்ய உதவும் தளம்.
கணிணி மற்றும் அதனோடு தொடர்புடைய தொழில் புரிவோருக்கு சரளமாக டைப் செய்யும் திறன் இருத்தல் அவசியமாகும். இது தவிர டைபிங் இனை ஓரளவாவது முறையாக செய்வதற்கு அனைவரும் தெரிந்திருத்தல் இன்றைய காலகட்டத்தினைப் பொறுத்த வரையில் கட்டாயமான ஒன்றுதான். இப்பூது அதிகமானோர் டைபிங் வகுப்புக்குச் செல்வதில்லை. டைபிங் திறனை அதிகரித்துக்கொள்வதற்கு பயிற்சி அவசியம் தேவை இதன் படி ‘டைபிங்கிளப்” எனும் இணையத்தளம் அதற்கு உதவுகின்றது. இந்த தளத்தில் டைப் தொடர்பான பல்வேறு பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்குமான விளக்கமும் இருக்கின்றது. […]