நன்மைகளுடன் தீமைகளையும் தரும் நவீன தகவல் தொழில்நுட்பம்.
தகவல் பரிமாற்றம் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. மனிதன தோன்றிய காலத்திலேயே இத்தகைய தகவல் தொடர்பும் தோற்றம் பெற்றது. ஓலி, தீ, சைகை என்பனவே மனிதனின் ஆரம்பகட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாகக் காணப்பட்டன. இதனையடுத்து கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடுகள் போன்றவை மூலமாகவும் இயல், இசை வாயிலாகவும் கருத்துகளைப் பிறருக்கு மனிதன் வெளிப்படுத்தினான்.அதன் பின்பு தகவல் தொடர்பு அச்சடித்த காகிதங்கள், புத்தகங்கள் எனறு வளர்ந்தது. விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தபால், தந்தி, தொலைபேசி என்று தகவல் தொடர்புசானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தகவல்களை […]