இனி Facebook-ல் 3D புகைப்படம் உருவாக்குவது மிகவும் எளிது…
3D புகைப்படங்கள் என்று அழைக்கப்படும் ஒரு புதுவித அம்சத்தை Facebook 2018-ல் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்த படங்கள் கூடுதல் பரிமாணத்துடன் நிகழலை தோற்றத்தை பயனர்களுக்கு அளித்தது.
பயனர்களை பெரிதும் கவர்ந்த இந்த அம்சம் ஆனது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின் கேமிராக்களை கொண்ட தொலைபேசிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வியக்கத்தக்க அம்சம் ஆனது தற்போது ஒரே ஒரு பின் கேமிரா கொண்ட மொபைல் போன்களிலும் பயன்படுத்தலாம் என Facebook தெரிவித்துள்ளது. இதற்கான சிறப்பு தொழில்நுட்பத்தையும் Facebook தற்போது புகுத்தியுள்ளது.
முன்பு 3D புகைப்படங்களை Facebook-ல் பயன்படுத்த இரண்டு பின் கேமிரா கொண்ட தொலைபேசிகளை பயன்படுத்தல் வேண்டும். அதாவது தொலைபேசியில் உள்ள இரண்டு கேமிராக்களில் இரண்டாவது கேமரா ஒரு படத்தில் உள்ள தூரத்தை தீர்மானிக்க பயன்படும், அதேவேளையில் முதன்மை கேமிரா கருபொருளை படம்பிடிக்கும். இந்த இரண்டு கேமிராக்கல் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு 3D புகைப்படங்களை Facebook பயனர்களுக்கு காண்பிக்கும். ஆனால் தற்போது Facebook இந்த அம்சத்தின் பின்னால் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது மற்றும் ஒரு பின்புற கேமராவிலிருந்து தரவைப் பயன்படுத்தி ஒரு புகைப்படத்தில் 3D விளைவை அடையும் யுக்ியையும் புதுப்பித்துள்ளது.
மேலும் “மாற்றக்கூடிய நரம்பியல் வலைகளை” பயன்படுத்துவதன் மூலம் இந்த முயற்சி வெற்றிப்பெற்றதாகவும் Facebook தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.
இந்த 3D புகைப்படங்கள் 2D புகைப்படங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், பயனர் தொலைபேசியை சாய்க்கும்போது அல்லது உருட்டும் போது தனித்தனியாக நகரும் டன் அடுக்குகளாக வெட்டுவதன் மூலமும் செயல்படும் எனவும் இந்த பதிவு தெரிவிக்கின்றது. முன்னதாக, தூரத்தை அளவிடுவதன் மூலம் புகைப்படத்தை வெட்ட உதவியதால் இரட்டை கேமரா செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் தற்போது இந்த யுக்தியை சற்று மேம்படுத்தி Facebook ஒற்றை கேமிரா தொலைப்பேசிகளில் 3D அம்சத்தை புகுத்தியுள்ளது.
இந்த புதிய காட்சி வடிவமைப்பை அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்கு கொண்டு வரும் வகையில் நிலையான 2D படத்திலிருந்தும் 3D புகைப்படங்களை உருவாக்க அதிநவீன இயந்திர கற்றல் நுட்பங்களை Facebook பயன்படுத்தியுள்ளது. ஆக., ஒரு நிலையான ஒற்றை கேமரா கொண்ட ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனத்தில் எடுக்கப்பட்ட புதிய ஷாட் அல்லது ஒரு தொலைபேசி அல்லது மடிக்கணினியில் சமீபத்தில் பதிவேற்றப்பட்ட பல தசாப்தங்கள் பழமையான படம், Facebook AI-ன் திறமையால் முப்பரிமாண வடிவம் பெறும் என Facebook-ன் வலைப்பதிவு நமக்கு தெரிவிக்கிறது.
இதன் பொருள் நீங்கள் உங்கள் பழைய புகைப்படங்களுக்கும் Facebook AI அம்சத்தைப் பயன்படுத்தி 3D விளைவை அளிக்க முடியும். ஆதாவது முன் கேமராவிலிருந்து நீங்கள் எடுத்திருக்கக்கூடிய ஒரு செல்பிக்கும் இதே விளைவை நீங்கள் அளிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : இந்த Facebook 3D புகைப்பட அம்சத்தை பயன்படுத்த உங்கள் தொலைப்பேசியில் புதுப்பிக்கப்பட்ட Facebook பதிப்பு இருப்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.