ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்ன என்பதனை எளிதாக கண்டுபிடிக்கும் தொழிநுட்பம்.
வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.
வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம் அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது.
_____________________________________________________
இணையதள முகவரி :http://www.distancefromto.net/
_____________________________________________________
இத்தளத்திற்கு சென்று From மற்றும் To என்பதில் நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கொடுத்து Measure Distance என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் உடனடியாக வரும் திரையில் நமக்கு இரண்டு ஊருக்கும் எத்தனை கி.மீ என்பதை துல்லியமாகவும் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான மேப்-ஐயும் காட்டுகிறது. கூகிள் மேப்-ல் இதைவிட சிறப்பான வசதிகள் இருக்கும் போது நாம் ஏன் இந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் மேப் பக்கம் திறக்க எடுத்துக்கொள்ளும் கால நேரத்தை விட இது வேகமாக இருக்கும்.ஓட்டுனர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் எத்தனை கி.மீ தூரம் என்பதை கூகிள் உதவியுடன் கண்டுபிடிக்க உதவும் இத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எமது நிறுவனத்தினூடாக உங்கள் ஊரிலுள்ள பாடசாலை,வணிக நிறுவனங்கள்,சூப்பர் மார்க்கெட்கள் , மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் மிகவும் அழகான முறையில் “வெப்சைட்-website” செய்ய வேண்டுமா..! உடனே 071 84 14 184 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]