டிக்டொக் உரிமையாளரின் வருமானம் இரட்டிப்பு!
டிக்டொக் செயலியின் உரிமையாளரான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு வருமானம் இரட்டிப்பாகியுள்ளது.
நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கிய ஒரு உட் குறிப்பில் மொத்த வருவாய் 2020 ஆம் ஆண்டில் 111 சதவீதம் 34.3bn (. 24.7bn) ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின் படி, உலகளாவிய ரீதியில் டிக்டொக் செயலியின் தொடர்ச்சியான பிரபலத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
பைட் டான்ஸ் மற்றும் பல சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் அழுத்தங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் குறித்த விடயம் வெளிவந்துள்ளது.
பைட் டான்ஸ் அதன் வருடாந்திர மொத்த இலாபம் 93 வீதமாக அதிகரித்து 19 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதோடு அதேநேரத்தில் 45 பில்லியன் டொலர் நிகர இழப்பை பதிவு செய்ததுள்ளது.
நிகர இழப்பு ஒரு கணக்கை சரிசெய்தல் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக இல்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி பைட் டான்ஸ் அதன் அனைத்து தளங்களிலும் மாதந்தோறும் சுமார் 1.9 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.
பைட் டான்ஸ் நிறுவனத்தின் ஒரு செய்தித் தொடர்பாளர் இந்த புள்ளிவிவரங்களை பிபிசிக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.