Pixel 4 smartphone தொலைபேசியின் Face Unlock வசதியை அறிமுகம் செய்யும் Google!
கூகுள் பிக்சல் 4 ஸ்மார்ட் தொலைபேசியின் Face Unlock வசதியுடன் உருவாகி வருகின்றது. இதன் டீசர் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.புதிய பிக்சல் 4 ஸ்மார்ட் தொலைபேசியில் I R sensor Project project soli சார்ந்த motion sensor தொழில்நுட்பத்தில் இயங்கும் Face Unlock வசதி வழங்கப்படுவது குறித்து கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
rader சார்ந்து இயங்கும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் தொழில்நுட்பம் project soli என்ற பெயரில் கூகுள் உருவாக்கியுள்ளது. இது கூகுளின் அதிநவீன தொழில்நுட்ப திட்ட குழுவினரால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.smart தொலைபேசியியை unlock செய்யும் போது Face Unlock சென்சார்களை ஆன் செய்யும் பணியை சோலி ரேடார் சிப் மேற்கொள்ளும்.
Face Unlock sensorகள் மற்றும் அல்காரிதம்கள் உங்களை அங்கீகரித்துவிட்டால், போனினை கையில் எடுக்கும் போதே அன்லாக் ஆக்கிவிடும்.பிக்சல் 4 ஸ்மார்ட் தொலைபேசியில் Face Unlock வசதி போனை எப்படி பிடத்திருந்தாலும் சீராக வேலை செய்யும். இதனை payment மற்றும் இதர APP பாதுகாப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிக்சல் 4 ஸ்மார்ட் தொலைபேசிகளின் மேல்பகுதியில் பொருத்தப்படும் motion sensing radars பல்வேறு மென்பொருள் மற்றும் அதிநவீன Hardware sensor உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், பயனர் smart phone அருகில் இருப்பதை இவை கண்டறிந்து கொள்ளும்.இதனால் பாடல்களை மாற்றுவது, அலாரம் off செய்வது, phone அழைப்புகளை silent இல் வைப்பது போன்றவற்றை கை அசைவுகளிலேயே இயக்க முடியும். motion sensorஅம்சம் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
Face Unlock மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பம் சாதனத்திலேயே இயக்கப்படுவதால், ஒளிப்பட தரவுகள் ஸ்மார்ட்தொலைபேசியை விட்டு வெளியே போகாது. Face Unlock அம்சத்திற்கு பயன்படுத்தப்படும் ஒளிப்படங்கள் கூகுள் serverகளுக்கோ மற்றவர்களுக்கோ பகிர்ந்து கொள்ளப்படாது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.