பேஸ்புக்கின் அவசர அறிவித்தல்!!! பயனாளர்கள் அதிர்ச்சியில்.!!!
இவ்வருடத்திற்குள் கோடிக்கணக்கான போலி பேஸ்புக் கணக்குகளை நீக்கி புதிய பாதுகாப்பு முறையொன்றை அறிமுகப்படுத்தப்போவதாக அதன் உரிமையாளர் மார்க் சுகர்பேர்க் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக தற்பொழுதுவரை கோடிக்கணக்கான போலி கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் நீக்க ஆரம்பித்துள்ளது.
2019 வரை பேஸ்புக் வலைத்தளத்தில் கண்டறியப்பட்ட கோடிக்கணக்கான போலி கணக்குகளை (Accounts) அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இணைய உலகில் போலி செய்திகளின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை குறைக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் அதிதீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வரிசையில் பேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 320 கோடி போலி கணக்குகளை பேஸ்புக்கில் இருந்து நீக்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் Active பயனர்களாக மாறும் போது இத்தனை போலி கணக்குகள் கண்டறியப்பட்டது.
Active பயனராகும் முன் கண்டறியப்பட்டதால் இவை பேஸ்புக்கின் வாடிக்கையாளர் கணக்கில் சேராது. தற்போதைய நிலவரப்படி பேஸ்புக் தளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் ஐந்து சதவிகிதமானோர் செப்டம்பர் மாதத்தின் பின்னர் சுமார் 240 கோடி கணக்குகள் போலி என பேஸ்புக் கணித்திருக்கிறது.

இந்த காலக்கட்டத்தில் போலி கணக்குகள் தவிர குழந்தைகளின் ஆபாசம் மற்றும் பாலியல் அச்சுறுத்தல் சார்ந்து சுமார் 1.85 கோடி தரவுகள் நீக்கப்பட்டதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இது ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது 13 சதவிகிதம் வரை அதிகமாகும். ஆபாச தரவுகளை கண்டறியும் வழிமுறையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றங்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அத்துடன் மற்றவரை துன்புறுத்தும் வகையில் பதிவிடப்பட்ட சுமார் 1.14 கோடி தரவுகள் நீக்கப்பட்டிருக்கிறது. பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் பகிரப்படும் தரவுகளை நீக்கும் பணிகளில் பேஸ்புக் தொடர்ந்து அதிதீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.