பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை… அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்..!!
சமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தலங்களில் புதிதாக வைரலாகியுள்ள Face app செயலி பயன்படுத்துவதன் மூலம் பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இணையத்தில் பிரபலமடைந்துள்ள #AgeChallenge என்பதனை அனைவரும் விரும்பி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த செயலி திடீரென பிரபலமடைந்துள்ளமையினால் பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் புதிய கேள்வி எழுந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் குறிப்பிட்டுள்ளது.
விசேடமாக தமது கையடக்க தொலைபேசியில் உள்ள அனைத்து புகைப்படங்களும் இந்த செயலியை உருவாக்கியவரிடம் செல்கின்றதா என சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செயலியை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொண்ட நபர்களில் ஒருவர் இதனை யன்படுத்த வேண்டாம் என டுவிட்டர் ஊடாக எச்சரிக்கை விடுத்தமையினால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இந்த செயலியில் உள்ளடக்கப்படும் புகைப்படம் எத்தனை காலம் சேமிக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் சரியான தகவல் வெளியிடப்படாமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இந்த செயலி ஊடாக கையடக்க தொலைபேசியில் உள்ள புகைப்படங்கள் அனுமதியின்றி வெளியேற கூடும் என புதிய கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளதாக சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.இதனால் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த செயலியை பயன்படுத்த வேண்டாம் என இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology newses.