கையடக்கத்தொலைபேசிகளில் கோப்புறைகளை(Folder) மறைத்து வைத்துக்கொள்வது எப்படி?
கையடக்கத்தொலைபேசிகளில் கோப்புகளையோ அல்லது ஆவணங்களையோ எந்த மென்பொருளின் உதவியும் இன்றி மறைத்துவைப்பதற்கான ஒரு வழிமுறைதான் இது.
1. முதலில் ஒரு கோப்பொன்றை (Folder) உருவாக்கிகொள்ளுங்கள் அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கோப்பையும்(Existing Folder) மறைத்துவைக்க பயன்படுத்தலாம்.
2.மறைத்துவைத்துக்கொள்ளவேண்டிய கோப்பை(Folder) .jad என்னும் நீட்சியுடன்(Extension) மீள் பெயரிட்டுக்கொள்ளுங்கள்(Rename the folder with extension of .jad) உதாரணம்: IMAGES.jad
3.இப்பொழுது அதேபெயரில் புதிய கோப்பொன்றை .jar என்ற நீட்சியுடன்(extension) உருவாக்கிக்கொள்ளுங்கள்.(now create a new folder with same name in the same directory with extension of .jar). உதாரணம் : IMAGES.jar
4.இப்பொழுது IMAGES.jad என்னும் கோப்புறை மறைந்துவிடும்.
நீங்கள் மீண்டும் மறைந்து காணப்படும் கோப்புறையை பெற்றுக்கொள்ள .jar என்னும் நீட்சியுடன் உருவாக்கிய கோப்புறையிலுள்ள .jar என்னும் நீட்சியை அகற்றிவிடுங்கள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about the latest technologies.