கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி?
தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் வளர்ந்து வருவதால் கம்ப்யூட்டருக்கு கண்ணுக்கு தெரியாத பல ஆபத்துக்கள் வருகின்றன. குறிப்பாக வைரஸ்கள், மால்வேர்கள் உள்பட பல விஷயங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட்வெரை டேமேஜ் செய்வதுடன் ஆபரேட்டிங் சிஸ்டத்தையும் செயல்பட விடாமல் செய்து விடுகிறது. கம்ப்யூட்டரை பாதுகாக்க பல ஆன்ட்டி வைரஸ்கள் தற்போது சந்தையில் விற்கப்பட்டாலும், அதையும் மீறி அதிக சக்தியுள்ள வைரஸ்கள் கம்ப்யூட்டரில் புகுந்து கம்ப்யூட்டரையும் அதில் உள்ள டேட்டாக்களையும் அழித்துவிடுகின்றன.
ஹார்ட் டிஸ்க் இதற்கு ஒரே வழி, கம்ப்யூட்டரை ஃபார்மேட்டிங் செய்து சுத்தமாக்குவதுதான். ஃபார்மேட்டிங் செய்தபின்னர் கம்ப்யூட்டர் வைரஸ்கள் இன்றி பாதுகாப்பானதாக மாறி விடுகிறது. மேலும் நீங்கள் பயன்படுத்திய ஒரு கம்ப்யூட்டரை விற்பனை செய்ய வேண்டும் என்றால், என்னதான் உங்கள் டேட்டாவை டெலிட் செய்திருந்தாலும், அதனை ஹார்ட் டிஸ்க் மூலம் மீண்டும் மீட்க முடியும். எனவே கம்ப்யூட்டரை விற்பனை செய்யும் முன் ஃபார்மேட் செய்து விற்பனை செய்தால் உங்களுடைய எந்த டேட்டாவையும் வாங்குபவர் பயன்படுத்த முடியாது. எனவே ஃபார்மேட் பற்றி கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
டேட்டாக்களை பாதுகாத்து கொள்ளுங்கள்: நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை ஃபார்மேட் அல்லது ரீஸ்டோர் செய்துவிட்டால் அதன்பின்னர் அதில் இருந்து உங்களுடைய டேட்டாகளை எந்த காரணத்தையும் முன்னிட்டு மீட்டெடுக்க முடியாது. எனவே கம்ப்யூட்டரை ஃபார்மேட் செய்வதற்கு முன்னர் உங்களுடைய அனைத்து முக்கியமான ஃபைல்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் ஆகியவற்றை வேறொரு பாதுகாப்பான சாதனத்திற்கு மாற்றி கொள்ள வேண்டியது அவசியம்.
சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் உங்களுடைய ஆபரேசன் சிஸ்டத்தில் உள்ள அனைத்தையும் பேக்கப் செய்ய வேண்டும் என்றால் அதற்கென சந்தையில் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் விற்பனையாகி வருகின்றன. அவற்றை வாங்கி அதில் சேமித்து கொள்ளவும். தேவையான ஃபைல்களை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து எடுத்து ஒரு எக்ஸ்டர்னல் டிரைவில் சேமித்து கொள்ளவும்.
விண்டோஸ் லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது: விண்டேஸ் லேப்டாப்பில் மெனு ஆப்சன் சென்று அதில் ரிகவரி என்பதை ஓப்பன் செய்து ரீஸ்டோர் செய்யலாம். அதன் பின்னர் Remove everything and reinstall Windows என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்தும் ரீஸ்டோர் ஆகிவிடும். இந்த சமயத்தில் விண்டோஸ் ஒருசில ஆப்சன்களை உங்களிடம் கேட்கும். அதனை தேர்வு செய்துவிட்டால் போதும். இதனை தேர்வு செய்த பின்னர் உங்கள் கம்ப்யூட்டர் ரீஇன்ஸ்டால் பணி தொடங்கிவிடும். இந்த ஸ்டெப்புக்கு பின்னர் உங்களால் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இருந்த எந்தவொரு டேட்டாக்களையும் மீண்டும் பெற முடியாது என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.
ஆப்பிள் லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது: ஆப்பிள் லேப்டாப்பில் முதலில் ரீஸ்டார்ட் செய்து அதன்பின்னர் ஒரே நேரத்தில் கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள கமாண்ட் மற்றும் ஆர் கீகளை ரீபூட் ஆகும்போது அழுத்த வேண்டும். அப்போது ஸ்க்ரீனில் தோன்றும் மெனுவில் Disc Utility என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர் கமாண்ட் மற்றும் ஆர் கீகளை விட்டுவிட வேண்டும். அதன்பின்னர் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் உங்கள் கம்ப்யூட்டரில் கனெக்ட் ஆகியிருக்கும் டிரைவ்களை காட்டும். அதில் மெனு சென்று ‘எரேஸ்’ என்பதை தேர்வு செய்து க்ளிக் செய்யவும். அதன்பின்னர் தோன்றும் ஒரு பாப்-அப் மெனுவில் ஃபார்மேட் என்ற ஆப்சனை தேர்வு செய்து அதில் மேக் ஓஎஸ் எக்ஸ்டெண்டட் என்பதை தேர்வு செய்து ஃபார்மேட் செய்ய வேண்டும்.
எக்ஸ்டெண்ட் டிரைவ் அதன்பின்னர் மீண்டும் எரேஸ் க்ளிக் செய்தால் ஃபார்மேட்டிங் பணி தொடங்கிவிடும். விண்டோஸ் ஓஎஸ் போலவே இந்த மேக் ஓஎஸ்-லும் பார்மேட் செய்த பின்னர் கம்ப்யூட்டரில் இருந்து எந்தவொரு தகவல்களையும் மீண்டும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஃபார்மேட் செய்வதற்கு முன்னர் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஃபைல்களையும் வேறு ஒரு எக்ஸ்டெண்ட் டிரைவ் மூலம் சேமித்து கொள்ள வேண்டியது அவசியம் என்பது மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தப்படுகிறது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.