விண்டோவ்ஸ் Operating System இற்கான FREE…அண்டிவைரஸ் SOFTWARE…!!!
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய பெரிய பிரச்சினை கணனியில் வைரஸ் தாக்கம். இதற்கான காரணம் என்ன, எதனால் இது ஏற்படுகின்றது என்ற பிரச்சினைக்கு தீர்வாக இந்த இலவச அண்டிவைரஸ் மென்பொருளினை உங்கள் கணனியில் நிறுவலாம்.
இங்கு விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இலவச அண்டி வைரஸ் தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. இங்கு இதனது தொகுப்புகளுக்கான விபரங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எது தங்களது கணனிக்கு தேவை என தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் அனைத்தையும் சரியாக ஆராய்ந்து முடிவு செய்து ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவது விண்டோஸ் 7, 8, 10, சிஸ்டத்தைத் தங்களின் கம்ப்யூட்டர்களில் கொண்டுள்ளவர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. ஏ.வி.ஜி. (AVG): அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் அண்டி வைரஸ் சொப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் அண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். இது வைரஸ்கள், பயமுறுத்தும் சொப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இடமான பைல்களைத் தடுத்து நிறுத்துகிறது. இணையத்தள முகவரிகளை ஆய்வு செய்து எச்சரிக்கை செய்கிறது. நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. டேட்டாக்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது. இதனை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணையத்தள முகவரி : http://free.avg.com/inen/homepage.
2. பெண்டா செக்யூரிட்டி (Panda Security): மிகச் சிறந்த விண்டோஸ் 8 அண்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. இதன் சில செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம். எப்போதும் பாதுகாப்பு, இணையத்தள முகவரி மற்றும் இணையத்தை வடிகட்டுதல், தானாக அப்கிரேட் செய்யப்படும் வசதி, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையும், செயல்படும் விதத்தினையும் கண்காணித்து அறிவித்தல் ஆகியவற்றைச் சிறப்பான செயல்பாடுகளாகக் குறிப்பிடலாம். http://www.pandasecurity.com/india/windows8 என்ற முகவரியில் உள்ள இணையத்தளத்திலிருந்து இதனை இலவசமாகப் பெறலாம்.
3. அவாஸ்ட் (Avast): இதனைப் பெரும்பாலானவர்கள், முன்பே பயன்படுத்தி, இதன் செயல்திறனை அறிந்திருப்பார்கள். மிகச் சிறந்த விண்டோஸ் 8 அண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது. இலவசமாக இதனைப் பெற, நீங்கள் செல்ல வேண்டிய இணையத்தள முகவரி: http://www.avast.com
4.பிட் டிபெண்டர் அண்டி வைரஸ் ப்ளஸ் (Bit Defender Anti Virus Plus): இலவசமாகக் கிடைக்கும் இந்த அண்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர்களைச் சரியாக அடையாளம் கொண்டு தடுக்கிறது. இது செயல்படும் வேகம் மிக அபாரம். ஒன்லைனில் நிதி பரிவர்த்தனையின் போதும் பாதுகாப்பு தருகிறது. நம் டிஜிட்டல் அடையாளங்களைப் பாதுகாக்கிறது. தேவையற்ற பொப் அப் விண்டோக்களை எப்போதும் தருவது இல்லை. இதனைத் தனியாக நாம் செட் செய்திட வேண்டியதில்லை. தானாகவே, தன்னை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இதனைப் பெற செல்ல வேண்டிய இணையத்தள முகவரி: http://www.bitdefender.com/Download/
5. அவிரா (Avira): அவிரா அண்டி வைரஸ் புரோகிராமும், விண்டோஸ் 8க்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் மட்டுமின்றி, விளம்பரங்களாக வரும் ஆட் வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது. நம் இணைய தளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன், தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது. இலவசமாக இதனைப் பெற http://www.avira.com/en/avirafreeantivirus என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.
6. கஸ்பெர்ஸ்கி அண்டி வைரஸ் (Kaspersky Antivirus): விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த அண்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலானவர்களால் விரும்பப்படும், இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது. வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது. இதனைப் பெற http://usa.kaspersky.com/downloads என்ற முகவரியில் உள்ள இணையத்தளம் செல்லவும்.
மேலே தரப்பட்டுள்ள அண்டி வைரஸ் புரோகிராம்களுடன், இன்னும் சில இணைய வெளியில் கிடைக்கலாம். அனைத்து புரோகிராம்கள் குறித்தும் அறிந்து, தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், ஏதாவதொன்றைப் பயன்படுத்துவதே நமக்குப் பாதுகாப்பினைத் தரும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.
[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.