எமது நிறுவனம் வழங்கும் இலவச டவுண்லோட் புரோகிராம்கள் பற்றிய தொகுப்பு – free download programs.
இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் இணைப்பு வழங்கும் வேகத்தைப் பயன்படுத்தி நாம் டவுண்லோட் செய்திடும் பைல்களை எந்த சிக்கலுமின்றி வேகமாக இறக்கித் தர நமக்கு டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன.
அவ்வகையில் இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் நமக்கு கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் தொகுப்புடன் இத்தகைய வசதி இணைந்தே இருந்தாலும் டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தரும் பல வசதிகள் அதில் இல்லை. ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இøணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை கிளிக் செய்து டவுண்லோட் செய்திடும் வசதி போன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. பொதுவாக இந்த கூடுதல் வசதிகள் எல்லாம் இத்தகைய புரோகிராம்களில் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால் இலவச புரோகிராம்கள் அதிகமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு கிடைக் கும் இந்நாளில் மேல் குறிப்பிட்ட வசதிகள் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களிலேயே தரப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில டவுண்லோட் மேனேஜர்களில் அதிகமான எண்ணிக்கையில் இந்த வசதிகள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பாகும். அவற்றில் மிகச் சிறந்த
மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.
Free Download Manager
1. புரோகிராம் பெயர் : FreeDownload Manager
2. வழங்குபவர் : FreeDownload Manager.org
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.freeDownloadManager.org/download.htm
4. பைல் அளவு: 5754 கேபி.
இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட் வேர் தொகுப்பு. இதன் பெயருக்கேற்ற வகையில் சிறப்பான பல வசதிகளை இந்த புரோகிராம் தருகிறது. அனைத்து பிரவுசர் தொகுப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இன்டர்பேஸ் இயங்குகிறது. எப்.டி.பி. மற்றும் எச்.டி.டி.பி. வகைகளுக்குத் தனித்தனியே கிளையண்ட் புரோகிராம்கள் இணைக்கப்பட்டுள்ளன.
டவுண்லோட் செய்யப்பட வேண்டிய புரோகிராம்களை பகுதி பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் வேகமாக டவுண்லோட் செய்து தருகிறது. டவுண்லோட் செய்திடும் நேரத்தில் இன்டர்நெட் தொடர்பு விட்டுப் போனாலோ அல்லது கம்ப்யூட்டர் முடங்கிப் போனாலோ அடுத்த முறை விட்டுப்போன இடத்திலிருந்து பைலை டவுண்லோட் செய்து இணைத்து தரும் திறன் கொண்டது. வீடியோ தளங்களிலிருந்து டவுண்லோட் செய்வதுடன் பார்மட்டுகளையும் மாற்றி தருகிறது. இதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ள அப்லோட் மேனேஜர் புரோகிராம் பைல்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள அப்லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. ஒரு பைலை பல்வேறு லிங்க்குகளிலிருந்து ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்து தரும் திறன் கொண்டது. டவுண்லோட் செய்யப்படும் பைல்களை அதன் வகைகளுக்கிணங்க சேவ் செய்து நிர்வகிக்க உதவிடுகிறது.
ஒரு பைலை டவுண்லோட் செய்திடும் முன் அந்த பைல் குறித்து மற்றவர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று காட்டப்படுகிறது. அதே போல நீங்களும் உங்கள் கருத்தைப் பதிவு செய்திடலாம். இதனால் கெடுதல் விளைவிக்கும் பைல்களை டவுண்லோட் செய்திடுவதனைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்திடலாம்.
முழு இணையதளத்தையும் அப்படியே டவுண்லோட் செய்திடும் திறன் கொண்டது. இதற்கென எச்.டி.எம்.எல். ஸ்பைடர் என ஒரு புரோகிராம் பிரிவு தரப்படுகிறது. அதனால் தான் இதனை சைட் ரிப்பர் (‘site ripper’) என அழைக்கின்றனர்.
Orbit Downloader
1. புரோகிராம் பெயர் : OrbitDownloader
2. வழங்குபவர் : OrbitDownloader.com
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.orbitdownloader.com/download.htm
4. பைல் அளவு: 2217 கேபி.
டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்களின் லீடர் என இது செல்லமாக அழைக்கப்படுகிறது. ஓடியோ மற்றும் வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட துணை புரியும் நோக் கத்துடன் இந்த புரோகிராம் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய சில அம்சங்களுடன் வழக்கம்போலான இ.எக்ஸ்.இ. மற்றும் காம் பைல்கள் மட்டுமின்றி ஸ்ட்ரீமிங் மீடியா வகையைச் சேர்ந்த ஓடியோ மற்றும் வீடியோ பைல் களை டவுண்லோட் செய்திடுகிறது. யு–ட்யூப் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற சில தளங்களிலிருந்து நேரடியாக டவுண் லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. இன்றைக்குக் கிடைக்கும் சிறந்த டவுண் லோட் மேனேஜர் புரோகிராம்களில் ஒன்று எனப் பலராலும் பாராட்டுப் பெற்றது.
இதனைப் பயன்படுத்த எந்தவிதமான ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை. விளம்பரங்களோ அல்லது ஸ்பை வேர் புரோகிராம்களோ இல்லை என சான்று பெற்றது. யு–ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திட இது மிக உகந்தது என பாராட்டுப் பெற்றது. தற்போதைய பதிப்பு 2.7.3.
Flash Get
1. புரோகிராம் பெயர் : FlashGet
2. வழங்குபவர் : Trend Media
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.flashget.com/download.htm
4. பைல் அளவு: 4520கேபி.
இன்டர்நெட்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள புரோகிராமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. டவுண் லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது எளிதாக தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம், இரண்டாவது டவுண்லோட் செய்யப் பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்துவகைப்படுத்தும் வழிகள்.
இந்த புரோகிராம் முதலில் சீன சொல்லை ஒட்டி ஒஞுtஞிச்ணூ என அழைக்கப் பட்டது. இதன் புதிய பதிப்பு 1.9.6. இதில் மல்ட்டி சர்வர் ஹைபர் த்ரெடிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு புரோடோகால் முறைகளை இதில் பயன்படுத்தி டவுண் லோட் செய்திடலாம். இறக்கப் படும் பைலின் அளவிற்கேற்ப பைல் இறக்கப் படும் வேகம் 6 முதல் 10 முறை அதிகரிக்கப்படுகிறது.
டவுண்லோட் செய்யப் படும் பைலை பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் இந்த பகுதிகளை டவுண்லோட் செய்து பின் இணைத்துத் தருகிறது. ஒரு பைல் மட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல பைல்களை இது போல பிரிவுகளாகப் பிரித்து டவுண்லோட் செய்கிறது. அத்துடன் எந்த நேரத்தில் எந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும் என வரையறை செய்திடலாம். இதனால் நம் இன்டர் நெட் இணைப்பு வேகத்தினை ஒட்டியும் நம் தேவையை பொறுத்தும் டவுண் லோட் செய்திட முடிகிறது.
இந்த புரோகிராமைப் பயன்படுத்துகையில் எந்த அட்–வேர் புரோகிராமும் குறுக்கிடாது. எந்தவிதமான ஸ்பைவேர் புரோகிராமும் இல்லை என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான ராம் மெமரியைப் பயன்படுத்துவதால் டவுண்லோட் செய்திடுகையில் நம்முடைய வேலையை கம்ப்யூட் டரில் தொடர்ந்து மேற் கொள்ளலாம். டவுண்லோட் முடிந்தவுடன் தானாக கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி டவுண்லோட் செய்யப் பட்ட பைலில் வைரஸ் எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்கிறது.
ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இøணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை டவுண்லோட் செய்திடும் வசதிபோன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. டவுண்லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப்பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்து வகைப்படுத்தும் வழிகள்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.