கூகுளின் ‘ஒலி பெருக்கி’.!
கூகுளின் ‘சவுண்ட் ஆம்ப்ளிஃபயர் செயலி’ (Sound Amplifier app) இப்போது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ (Marshmallow) மற்றும் அதற்கு மேலான அமைப்பு கொண்டு இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கப்பெரும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனம் பல்வேறு அளவிலான செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இரண்டு செயலிகளை முன்னதாக அறிமுகப்படுத்தியிருந்தது.
அவற்றில் ஒன்றுதான் ‘சவுண்ட் ஆம்ப்ளிஃபயர் செயலி’. பகுதி செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த செயலி ஒலியின் அளவையும் மேம்படுத்தி மற்றும் அதை தெளிவுபடுத்தி அளிக்கும்.
துவக்கத்தில் ஆண்ட்ராய்ட் 9.0 பை (Android 9.0 Pie) அமைப்பு கொண்டு இயங்கும் சாதனங்களுக்கு மட்டுமே இந்த செயலி பயன்பாட்டிற்கு கிடைத்தது. பழைய அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களை கொண்ட அதிகமான மக்கள் இதைப் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பதால், இப்போது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ வரையிலான பழைய அமைப்புகளை கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கும் செய்யும் வண்ணம் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுளின் ஒரு பதிவின்படி, ‘சவுண்ட் ஆம்ப்ளிஃபயர்’ இப்போது ஆடியோ காட்சிப்படுத்தல் அம்சத்துடன் புதிய தோற்றத்தையும் உணர்வையும் கொண்டுள்ளது. தொடங்குவதற்கு முன், உங்கள் ஹெட்ஃபோன்களை பயன்படுத்தி, இந்த ‘சவுண்ட் ஆம்ப்ளிஃபயர்’ செயலியை செயல்படுத்த வேண்டும். அதன்பிறகு ஒலியின் அளவையும் மேம்படுத்துதல் மற்றும் அதை தெளிவுபடுத்துதல் என அனைத்திற்கும் உதவும்.
இப்போது ‘சவுண்ட் ஆம்ப்ளிஃபயர்’ அதன் பணியைச் செய்கிறது என்பதை உறுதிப்படுத்த, கூகுள் மேலே குறிப்பிட்டுள்ளபடி ஆடியோ காட்சிப்படுத்தல் அம்சத்தைச் சேர்த்துள்ளோம், இது ஒரு ஒலியில் நீங்கள் செய்யும் மாற்றங்களைக் நேரடியாக காண உதவும்.
முன்பு இருந்ததை போல, இந்த ‘சவுண்ட் ஆம்ப்ளிஃபயரை செயல்படுத்த நீங்கள் தனியாக எதுவும் செய்யத் தேவையில்லை.
மேலும், இந்த ‘சவுண்ட் ஆம்ப்ளிஃபயர்’ கூகிள் பிளே ஸ்டோரில் இலவச செயலிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது, அங்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.