கூகுள் Mapல் சேர்க்கப்படும் புதிய அம்சம்…அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
பயணங்களை இலகுவாக்குவதற்கு கூகுள் மேப்பானது மிகவும் பயனுள்ள அப்பிளிக்கேஷனாக காணப்படுகின்றது.இதில் உணவகங்கள், கடைத்தொகுதிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், அலுவலகங்கள் என பல்வேறு வகையான இடங்களையும் இலகுவாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது.இந்த வரிசையில் தற்போது இலத்திரனியல் வாகனங்களை (Electronic Vehicles – EV) சார்ஜ் செய்யக்கூடிய நிலையங்களையும் உள்ளடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது Nissan, Tesla, BMW போன்ற வெவ்வேறு நிறுவனங்கள் இலத்திரனியல் வாகனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்கின்றன.இந்நிறுவனங்களின் வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடிய பிரத்தியேக இடங்கள் தனித்தனியாக கூகுள் மேப்பில் காண்பிக்கப்படவுள்ளன.இவ் வசதியினைப் பெறுவதற்கு கூகுள் மேப்பில் செட்டிங்ஸ் பகுதிக்கு செ்று Electric Vehicle Settings என்பதில் Your Plugs என்பதில் வாகன வகையை தெரிவு செய்து சேமித்துக்கொள்ளவும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.