Google-ன் தகவல் பகிர்வு செயலி Files Go தற்போது புதுவடிவில்.!
கூகிள் நிறுவனம் தனது தகவல் சேமிப்பு, பகிர்வு செயலியான Files Go-வினை Files என மறுவெளியீடு செய்ய முடிவு செய்துள்ளது!
கடந்த மாதம் ஒன்லைன் தகவல் சேமிப்பு, பகிர்வு செயலியான Files Go-வினை அறிமுகம் செய்தது. இந்த செயலியானது பயனர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.
குறைந்த நினைவகம் கொண்டு இயக்கும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த செயலி பெரிதும் உதவியது. இதன் காரணமாக குறுகிய காலகட்டத்தில் சுமார் 30 மில்லியன் பயனர்களை இந்த Files Go பெற்றது. Files Go-வின் பயன்பாடு இந்தியா, பிரேசில், நைஜீரியா போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி நாடுகளில் பெரிதும் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்த கூகிள் நிறுவனம் Files Go-னை மேம்படுத்தி தற்தபோது Files என்னும் பெயரில் மீண்டும் வெளியிடுகிறது.
Files Go ஆனது குறைவேக நெட்வேர்கிலும் சிறப்பாக செயல்படுவதும், நெட்வேர்க் இல்லா சமயத்திலும் தகல்களை மிக வேகமாக பகிர்ந்துக்கொள்வதிலும் அதிக திறன் கொண்டது என்பதால் இந்த அசூர வளர்ச்சியினை கண்டுள்ளதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக தரவுகளை கையடக்க போன்களில் சேமித்து வைக்க இயலாத நிலையிலும், ஒன்லைனில் சேமித்து வைத்து பின்னர் தேவையின் போது மீட்டெடுத்து பயன்படுத்தும் வகையிலும் Files Go உதவுகின்றது. இதன் காரணமாக மற்ற செயலிகளை காட்டிலும் Files Go மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
தற்போது வெளியாகவுள்ள Files செயலி ஆனது Files Go-ன் அம்சங்களையும், பயனர்களை கவரும் வகையில் மேலும் பல சிறப்பம்சங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர் மகிழ்ச்சியினை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் இந்த செயலியானது வெற்றிகாண வேண்டி பயனர்களின் தேவைகளை கேட்டறிந்து வடிவமைக்கப்பட்டு வருகிறது எனவும் கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.