Hangout Chat சேவை முடக்கப்படாது என கூகிள் உறுதியளித்துள்ளது !
உலகின் பிரபல நிறுவனமான கூகுள் தனது Hangouts வசதியினை Hangouts Meet பெயர் மாற்றம் செய்து பயனாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு Gchat வசதிக்கு மாற்றுப்பொருளார் Hangouts அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான காலத்தில் நல்ல வரவேற்பினை பெற்ற இந்த வசதி தற்போது செயல்பாடற்று கிடப்பதால் கூகிள் நிறுவனம் சமீப காலமாக இந்த வசதியினை மேம்படுத்த மறந்துவிட்டது. இந்நிலையில் இந்த வசதியானது வரும் 2020-ஆம் ஆண்டு முடக்கப்படும் என செய்திகள் வெளியானது.
இந்த தகவல்களை மறுத்துள்ள கூகிள் நிறுவனம், Hangouts வசதியினை Hangouts Meet என பெயர் மாற்றம் செய்து பயனாளர்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் Hangouts பயனாளர்களின் கணக்குகள் Hangouts Meet கணக்கிற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தாண்டின் அக்டோபர் மாதம் கூகிளின் மற்றொரு வசதியான கூகுள் ப்ளஸ் சேவையை நிறுத்தவுள்ளதா அறிவித்தது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ற்போது கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தி வெளியானதை அடுத்து கூகிள் இந்த அதிரடி நடவடிக்கையினை எடுத்தது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் கூகுள் பிளஸ் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும் நிலையில் 10 மாதங்களுக்குள் பயனாளர்கள் தங்களின் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது Hangouts Chat சேவையினை மேம்படுத்தி Hangouts Meet என்னும் பெயரில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.