இணையதளத்தின் லோடிங் வேகத்தை அறிய உதவும் கூகுல் கிரோம் பிரவுஸர்
தனிப்பட்ட Blogging, சிறு அளவிலான வணிகம் அல்லது மற்ற ஆன்லைன் பொருட்கள் என்று வந்துவிட்டாலே, இணைய பக்கத்தின் (Web page) வேகம் எப்படி உள்ளது என்பது முக்கியமாக கவனிக்கப்படுகிறது. உங்களிடம் பயனர்கள் தொடர்ந்து வர வேண்டுமானால், உங்கள் இணைய பக்கம்(Web page) வேகமாக ஏற்றம் அல்லது லோடிங் ஆக வேண்டும்.
உண்மையை கூறினால், ஒரு இணையதளம் 3 வினாடிக்குள் ஏற்றம்(Loading) அடையவில்லை எனில், அதற்கு திரும்ப செல்ல பயனர்கள் விரும்புவதில்லை. மேலும், தேடல் என்ஜின்(Searching engine) தரவரிசையில் முன்னேற்றம் பெறுவதற்கும், ஒரு சிறந்த பயனர் அனுபவத்தை(User exprence) அளிக்க செய்வதிலும் உள்ள முக்கிய காரணிகளில் ஒன்றாக மேற்கூறிய இந்த லோடிங் நேரம் அமைந்துள்ளது. இதற்காக மற்ற இணையதளங்களின் லோடிங் வேகம் எப்படியுள்ளது என்பதை அறிய விரும்பினால், நீங்கள் சோதித்து பார்க்கலாம். பொதுவாக, இணைய பக்கத்தின் லோடிங் வேகம் என்பது உங்கள் ஐஎஸ்பி(ISP (Internet Service Provider)) மூலம் அளிக்கப்படும் அலைவரிசை சேவையின் தரத்தை பொறுத்து அமைகிறது. இந்நிலையில் உங்கள் இணைய பக்கத்தின் லோடிங் வேகத்தை கூகுல் கிரோம் பிரவுஸர் மூலம் சோதித்து பார்க்க நீங்கள் விரும்பினால், கீழ்க்கண்ட படிகளைப் பின்பற்றலாம்.
படி 1: இணையதளத்தின் வேகத்தை நீங்கள் சோதித்து பார்க்க விரும்பினால், லோடிங் வேகத்தை துல்லியமாக பெறுவதற்கு, முதலில் உங்கள் கூகுல் கிரோம் பிரவுஸரில் உள்ள கேச்சி (Cache Memory) மற்றும் வரலாற்றை (History) நீக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும். இதற்கு அமைப்புகள்(Settings) சென்று ஹிஸ்ட்ரியை தேர்வு செய்து, கிளியர் பிரவுஸிங் டேட்டாவை(Clear browsing data) கிளிக் செய்ய வேண்டும்.
படி 2:
உங்களுக்கு காட்டப்பட்ட பட்டியலில் “Cached images and files, Browsing history, Cookies and other site data” என்ற பெட்டிகளைத் தேர்வு செய்துவிட்டு, “கிளியர் டேட்டா”வை கிளிக் செய்ததை உறுதி செய்யவும்.
படி 3: இணையதள வேகத்தை இன்காக்னிட்டோ மோடு (incognito mode) மூலமும் சோதித்து அறியலாம். ஏனெனில் இதில் எந்த குக்கீஸ் அல்லது கேச்சிகளும் பயன்படுத்துவதில்லை. இதற்கு கன்ட்ரோல்+ஸ்விஃப்ட்+என் (Press Ctrl+Shift+N) அழுத்தி இன்காக்னிட்டோ மோடை செயல்படுத்தலாம்.
படி 4: கேச்சியை(Cache) நீக்கிய பிறகு, கன்ட்ரோல்+ஸ்விஃப்ட்+சி அழுத்தி, க்ரோமின் கன்சோல் டூல்ஸ் திறந்து, “நெட்வார்க்”கில் கிளிக் செய்யவும்.
படி 5: இப்போது டொமைனுக்கான பகுதியில் இணையதளத்தின் டொமைன் பெயரை எழுத வேண்டும். அதன்பிறகு நீங்கள் எண்டரை கிளிக் செய்தவுடன், பக்கம் லோடிங் ஆக எடுத்து கொள்ளும் நேரம் உள்ளிட்ட தகவலைக் கொண்ட இணைய பக்கம் லோடிங் ஆக ஆரம்பிக்கும். ஒவ்வொரு கூறுகளும் லோடு ஆக எடுத்துக் கொள்ளும் நேரத்தை, காலவரிசை டேப்பில் காணலாம்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.
[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more newses about latest technologies.