இனி குரூப்பிலும் ரகசியமாக மற்றொருவருடன் பேசலாம்: வாட்ஸ்அப் அறிமுகம்.
குரூப்பில் மற்றொருவருடன் ரகசியமாக பேசும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பேஸ்புக்கும் வாட்ஸ் அப்பும் ஒரே நிறுவனம் என்றாலும், தொழில்நுட்ப ரீதியில் இரண்டிற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில், பேஸ்புக்கில் இருக்கும் வசதிகள் வாட்ஸ் அப்பில் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பயனாளர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனையடுத்து குரூப் வீடியோ காலிங், ஒருமுறை அனுப்பிய மெசேஜை டி டிலிட் செய்வது உள்ளிட்ட வசதிகள் வாட்ஸ் அப்பில் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், வாட்ஸ்அப் குரூப்பிலும், ஒருவர் மற்றொருவருடன் ரகசியமாக பேசும் வசதியை கொண்டுவரவுள்ளது. இதற்காக முதற்கட்ட சோதனையாக, வாட்ஸ்அப் பீட்டா 2.18.335 வெர்ஷனில் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும், ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் கொண்டுவர உள்ளது.
மேலும், வாட்ஸ்அப் பயனாளர்கள், இரவில் அதனைப் பயன்படுத்தும் போது, கண் கூசாமல் இருக்க, டார்க் மோட் (Dark Mode) என்ற வசதியையும் கொண்டு வரவுள்ளது. இதே போல், ஸ்டிக்கர்கள், கூடுதல் எமோஜி, வாட்ஸ்அப்பை ஓபன் செய்யாமலே ரிப்ளே செய்யும் வசதி போன்றவைகளை விரைவில் கொண்டு வரவுள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.