லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் பைல் மற்றும் போல்டர்களை இயக்குவது எப்படி?
கணினிகளில் பிரபலமாக இருக்கும் ஃபைல்களில் சிப் (Zip) பிரபலமான ஒன்றாகும். சிப் மூலம் பல்வேறு ஃபைல்களை ஒரே வடிவில் கம்ப்ரெஸ் செய்ய முடியும். இது டிஸ்க் ஸ்பேஸ் அளவை குறைப்பது மட்டுமின்றி, நெட்வொர்க் பேண்ட்வித்தும் குறைவாக செலவாகும். இதற்காகவே பலர் சிப் ஃபைல்களை அதிகம் பயன்படுத்த விரும்புவர்.
வழக்கமாக லினக்ஸ் தளத்தில் சிப் ஃபைல்களை அன்சிப் செய்வது அனைவரும் அறிந்தது தான். ஆனால் லினக்ஸ் தளத்தில் ஃபோல்டரை சிப் செய்வது எப்படி என தெரியுமா? இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். இதற்கு வெரிஃபை செய்யப்பட்ட சிப் அவசியமாகும்.
சிப் சப்போர்ட் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், அதனை வெரிஃபை செய்ய வேண்டும். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கமாண்ட் பயன்படுத்தி சிப் இன்ஸ்டால் செய்து சப்போர்ட்டை அன்சிப் செய்யலாம்.

sudo apt install zip unzip
தற்சமயம் உங்களது கணினியில் சிப் சப்போர்ட் இன்ஸ்டால் ஆகியிருக்கும். லினக்ஸ் தளத்தில் சிப் டைரக்ட்ரியை இயக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
லினக்ஸ் கமாண்ட் லைனில் சிப் செய்ய வேண்டும்
சிப் கமாண்ட் பயன்படுத்துவதற்கான சின்டாக்ஸ் மிகவும் வெளிப்படையானது
இதற்கு பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன. பல்வேறு ஃபைல்களை ஒன்றிணைத்து சிப் ஃபோல்டர் உருவாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கமாண்ட் பயன்படுத்த வேண்டும்: zip -r output_file.zip file1 folder1
இதில் -r ஆப்ஷன் வழிமுறைகளாக மாற்றி, தரவுகளையும் கம்ப்ரெஸ் செய்யும். அவுட்புட் ஃபைல்களில் .zip எக்ஸ்டென்ஷன் தானாக சேர்க்கப்பட்டு விடும்.
இனி ஃபைல்களை கம்ப்ரெஸ் ஆகி ஃபோல்டராவதை பார்க்க முடியும்.

மேலும் லினக்ஸ் தளத்தில் -e ஆப்ஷன் பயன்படுத்தி சிப் ஃபோல்டருக்கு பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ள முடியும்.
சிப் ஆர்ச்சிவ் ஃபைல்களை உருவாக்க எப்போதும் தடை விதிக்கப்படுவதில்லை. இதனை எளிமையாக உருவாக்கிவிடலாம்.
உபுன்டு லினக்ஸ் தளத்தில் GUI பயன்படுத்தி ஃபோல்டரை சிப் செய்வதற்கான வழிமுறைகள்
இதற்கு உபுன்டுவை பயன்படுத்தினாலும், இந்த வழிமுறை மற்ற டெஸ்க்டாப் தளங்களிலும் ஒரேமாதிரியானது தான்.
டெஸ்க்டாப் லினக்ஸ் இல் ஃபைல் அல்லது ஃபோல்டரை கம்ப்ரெஸ் செய்ய சில க்ளிக்களை செய்தாலே போதுமானது.
நீங்கள் சிப் ஃபோல்டராக மாற்ற வேண்டிய ஃபைல்கள் இருக்கும் ஃபைல்கள் இருக்கும் ஃபோல்டரை தேட வேண்டும்.
இங்கு ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை தேர்வு செய்ய வேண்டும். பின் ரைட் க்ளிக் செய்து கம்ப்ரெஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதனை ஒற்றை ஃபைல்களிலும் பயன்படுத்தலாம்.

இனி கம்ப்ரெஸ் ஆர்ச்சிவ் ஃபைலினை zip, tar xz அல்லது 7z ஃபார்மேட்டில் மாற்ற முடியும். இதில் உங்களுக்கு வேண்டிய ஃபார்மேட்டினை தேர்வு செய்து Create ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இதற்கு அதிக நேரம் ஆகாது. நீங்கள் தேர்வு செய்த டைரக்ட்ரியில் ஃபைல் ஆர்ச்சிவ் ஆகியிருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.