ஊழியர்களுக்கு புத்துணர்வை அளித்துள்ள மைக்ரோசொப்ட்டின் புதிய முயற்சி!!!
மைக்ரோசொப்ட் ஜப்பான் நிறுவனமானது தனது ஊழியர்களுக்கு முழுமையான ஊதியத்துடன் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே பணியாற்ற அனுமதித்து மேற்கொண்ட பரீட்சார்த்த நடவடிக்கையின் போது நிறுவனத்தின் விற்பனை 40 சதவீதத்தால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
அந்த நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தனது முழு நேர ஊழியர்களுக்கு முழுமையான ஊதியத்துடன் வாரத்தில் வெள்ளிக்கிழமையிலான விசேட விடுமுறை உள்ளடங்கலாக 3 நாட்கள் விடுமுறையை வழங்கி மேற்படி பரீட்சார்த்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
அத்துடன் ஊழியர்களுடனான கூட்டங்களுக்கான நேரம் ஆகக்கூடுதலாக 30 நிமிடங்களாக வரையறை செய்யப்பட்டதுடன் நேரடி கலந்துரையாடல்களுக்குப் பதிலாக இணையத்தளம் மூல மான கலந்துரையாடல்களை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட்டது.
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையை வழங்கியமை ஊழியர்கள் களைப்படைவதைக் குறைத்து அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதாக உள்ளதாக மைக்ரோசொப்ட் ஜப்பான் நிறுவனம் தெரிவிக்கிறது.
உலகில் அதிக மணித்தியால பணி நேரத்தைக் கொண்ட நாடகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.