மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர்.!
உலகின் மிகச்சிறிய கணினி ஒன்றை கடந்த மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்ததாக ஐபிஎம் செய்த அறிவிப்பு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரின் புருவத்தையும் உயர்த்தும் அளவுக்கு ஆச்சரியம் அளித்தது. ஆனால் தற்போது அதே மிக்சிகன் பல்கலையின் குழுவினர் 0.3 மிமீ அளவில் உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர். இது ஒரு அரிசியின் அளவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய சிறிய கம்ப்யுட்டர் 2x2x4 மிமீ அளவே உள்ளது என்பதும் அதற்குள் அனைத்து டேட்டாக்களும் அடங்கியுள்ளது என்பதும் ஆச்சரியம் அளிப்பவை.
இந்த கம்ப்யூட்டர் ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு இணையாக டேட்டாக்களை சேமித்து வைப்பது இயங்க வைப்பது என அனைத்து வேலைகளையும் செய்யும். இந்த மிகச்சிறிய சாதனம் குறித்து ஈ சீ இ பேராசிரியர் டேவிட் பிளா என்பவர் கூறியபோது, ‘இதை கம்ப்யூட்டர் என்று சொல்வதா? அல்லது வேறு பெயரில் சொல்வதா? என்று தெரியவில்லை. குறைந்த சாதனங்களில் அதிக வசதியை கொண்டுள்ள இந்த சாதனம் கம்ப்யூட்டரை விட மேல் என்று கூறியுள்ளார். இவர் தனது சக பேராசிரியர்களோடு இணைந்து சிறிய கம்ப்யூட்டர்கள் குறித்து ஆய்வு செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கம்ப்யூட்டரில் ரேம் மற்றும் அதற்கான பொருட்கள், பிராஸசர், வயர்லெஸ் டிரான்ஸ்மீட்டர் மற்றும் அதன் ரீசிவர் ஆகியவை உள்ளது. இந்த சாதனங்களில் உள்ள பொருட்கள் அனைத்து கண்ணுக்கு தெரியாத அளவில் மிகச்சிறியவை என்பதால் இவை இயங்குவதை ஒரு சிறிய லைட் எரிவதை வைத்து கண்டுகொள்ளலாம். இந்த லைட் எரிந்து கொண்டிருந்தால் பவர், மற்றும் டேட்டா இயங்குவதை உறுதி செய்து கொள்ளலாம்.
இதற்கு முந்தைய சிறிய கம்ப்யூட்டரை விட பத்து மடங்கு சிறியதாக இந்த கம்ப்யூட்டரை வடிவமைக்க ஒரு சவாலாக இருந்தது பவர் சிஸ்டமும், டிரான்ஸ்பேரண்ட் சிஸ்டமும் ஆகும். ஒரே ஒரு எல்.ஈ.டி லைட் மூலம் மட்டும் இந்த கம்ப்யூட்டரின் சர்க்யூட் இயங்குவதை உறுதி செய்ய முடியும். டேவிட் பிளா இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘இதன் சர்க்யூட் டிசைனை வடிவமைக்க நாங்கள் புதுவித முறையை கையாண்டோம். அதற்கு ரொம்ப சிறிய அம்சம் உள்ள பவர் போதும் என்பதும் இதன் ஒரு தனிச்சிறப்பு.
உதாரணமாக ஒரு சிறிய சோலார் செல் மூலம் டயோடுகளை மாற்றி கொள்ள முடியும். மேலும் இதில் உள்ள ஒரு சவால் என்னவெனில் குறைந்த பவரில் மிகவும் துல்லியமான ரிசல்ட்டை கொடுக்க வைக்க வேண்டும் என்பதுதான். மேலும் ஒரு துல்லியமான வெப்பநிலை சென்சார் வடிவமைக்கப்பட்டு புதிய சாதனம் நேர இடைவெளியில் வெப்பநிலைகளை மாற்றுகிறது, மின்னணு துகள்கள் வரையறுக்கப்பட்டு அதில் கிடைக்கும் இடைவெளிகள் அடிப்படை நிலையத்தினால் அனுப்பப்பட்ட ஒரு நிலையான நேர இடைவெளியில், பின்னர் ஒரு வெப்பநிலையாக மாற்றியமைக்கப்படும். இதன் விளைவாக, கணிசமான பகுதிகளில் வெப்பநிலைகள்-அதாவது செல்கள் ஒரு கிளஸ்டர் போன்ற-0.1 டிகிரி செல்சியஸ் ஒரு பிழையை கொண்டிருக்கும்.
மற்ற சாதனன்ங்களை விட குறைந்த வெப்பம் உள்ளதால் இதனால் வேறு எந்த பிரச்சனையும் வராது. அதோடு நமது டேட்டாக்களுக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. குறைந்த வெப்பநிலை மட்டுமே இதில் இருந்து வெளிப்படுவதால் புற்றுநோய் உள்பட மற்ற நோயில் இருந்தும் நாம் பாதுகாக்கப்படுகிறாது.
“வெப்பநிலை சென்சார் சிறியது மற்றும் உயிர்மூலமாக இருப்பதால், அதை ஒரு சுட்டிக்கு மாற்றுவோம் மற்றும் புற்றுநோய் செல்கள் அதை சுற்றி வளரும்,” என்று லூகர் என்பவர் கூறியுள்ளார் “நாங்கள் இந்த வெப்பநிலை சென்சரைப் பயன்படுத்வதாகவும், இவை சாதாரண திசுக்களுக்கு எதிராக கட்டி உள்ள வேறுபாடுகளைப் பற்றி ஆராய்வதுடன், சிகிச்சையின் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிக்க இந்த வெப்பநிலை உதவுவதாகவும் கூறியுள்ளார்.
முதன்முதலில் நாங்கள் இந்த மில்லிமீட்டர் அளவே உள்ள சிஸ்டத்தை செய்து முடித்தபோது, இந்த அளவுக்கு உலகிற்கு உதவும் என்று நாங்கள் யோசிகவில்லை. ஆனால் நாங்கள் இதனை மக்களிடம் அறிமுகம் செய்த பின்னர் டஜன்கணக்கில் ஆர்டர்கள் குவிந்தது எங்களுக்கே ஆச்சரியம் தான் என்று பிளா கூறியுள்ளார். குறைந்த மூலப்பொருட்களுடன் அமைக்கப்பட்ட இந்த சிறிய கம்ப்யூட்டர் உலகின் சிறிய கம்ப்யூட்டர் என்றா பெயர் பெற்றது எங்களுக்கு பெருமையே என்றும் அவர் மேலும் கூறியுள்ளார் இந்த சிறிய கம்ப்யூட்டரில் மேலும் என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்று பார்ப்போம்
கிளௌகோமா என்ற நோய்டை கண்டறிவதற்கு தேவைப்படும் கண்அழுத்தம் புற்றுநோய் சம்பந்தமான படிப்புகள் எண்ணெய் சேமிப்பு கண்காணிப்பு உயிர்வேதியியல் செயல்முறை கண்காணிப்பு கண்காணிப்பு: ஆடியோ மற்றும் காட்சி சிறிய நில் ஆய்வுகள் வி.எல்.எஸ்.ஐ தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து 2018 சிம்போசியாவில் ஜூன் 21 ம் திகதி இந்த ஆய்வு வழங்கப்பட்டது. “0.04மிமி3 16nW வயர்லெஸ் மற்றும் பேட்டரி இல்லாத சென்சார் சிஸ்டம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட கார்டெக்ஸ்-எம்0 + செயலி மற்றும் ஆப்டிகல் கம்யூனிகல் ஃபார் செல்லுலார் வெப்பநிலை அளவீட்டுடன். உள்ளது. இந்தப் பணி ஜப்பானின் மீ மற்றும் புஜித்சூ எலெக்ட்ரானிக்ஸ் அமெரிக்கா இன்க் ஆகியவற்றின் மீ புஜித்சூ செமிகண்டக்டர் லிமிடெட் உடன் இணைந்து செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies./div>