புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கிறதா? என கண்டுபிடிப்பது எப்படி.!
நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம். அதிலும் முக்கியமாக தற்போதுள்ள ஸ்மார்ட்போனை விட மேம்பட்டதாக வாங்க வேண்டும் என நம்மில் பெரும்பாலானோர் விரும்புவர். பெரிய திரை , சிறப்பான தரமான கேமரா மற்றும் சிறப்பான அனுபவம் தரும் அதிவேக ப்ரோசர்கள் கொண்ட போன் நம்மிடம் இருக்க வேண்டும் என எண்ணுவோம்.
ஆனால் இந்த சிறப்பம்சங்கள் அனைத்திற்கும் முன்னதாக, நம் கண்களுக்கு முன் தெரியும் அம்சங்களை தவிர்த்து ஏராளமானவற்றை நாம் கவனிக்கவேண்டும். உங்களுடைய புதிய போன் அண்ரய்ட் கருவியாக இருந்தால், உங்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஏதேனும் உள்ளதா என தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு இது. தொடரில்(Chain) உள்ள இடைவெளி காரணமாக ஏராளமான அழிவு ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் போனில் நுழைவதாக ஏகப்பட்ட செய்திகள் உலா வருகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு.
கன்ஸ்யூமர் இலக்ட்ரோன்னிக்ஸ் சப்ளை செயின் உலகமயமாக்கல் காரணமாக மூலப்பொருட்கள் முதல் முழுவதும் தயாரான பொருட்கள் வரை அனைத்திற்கும் உலகளாவிய சந்தை உள்ளது. அது நுகர்வோர் மின்னணு பொருட்களுக்கும் பொருந்தும். பல்வேறு விதமான நுகர்வோர் மின்னணு பொருட்களின் முக்கிய பாகங்கள் தயாரிக்க உதவும் சிலிக்கனின் முக்கிய உற்பத்தியாளராக சீனா உள்ளது. இதன் காரணமாக நவீன உற்பத்தி வழங்கல் தொடரில் சிக்கல் நிலவுகிறது. எனவே போன் தயாரிப்பில் பயன்படுத்தும் அனைத்தையும் துல்லியமாக கண்காணிப்பது என்பது மிக கடினம். தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை உங்கள் போனில் புகுத்தவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
அண்ரய்ட் ஸ்மார்ட்போன் உற்பத்தி அண்ரய்ட் இயங்குதளம் ஒரு ஓபன் (Open) சோர்ஸ் என்பதால், அதில் என்ன செய்ய வேண்டும் என ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு கூகுள் நிறுவனம் கட்டுப்பாடுகள் விதிக்கமுடியாது. ஒவ்வொரு உற்பத்தியாளரும் தங்களுக்கு ஏற்றவாறு கருவிகளின் மென் மற்றும் வன்பொருட்களை வடிவமைக்கலாம்.இதன் காரணமாகவே ஏராளமான ஸ்மார்ட்போன் மொடல்களால் சந்தை பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற அமைப்பு இயற்கையிலேயே அண்ரய்ட் ஒரு திறந்த அமைப்புள்ள மென்பொருள். அதன் தளத்தின் பாதுகாப்பை மேம்படுத்த கூகுள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அதன் உற்பத்தியாளர்களின் சிக்கலான வழங்கல் தொடர் மற்றும் மோசமான நடைமுறை காரணமாக வைரஸ் மற்றும் ஹேக்கர்களால் தாக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளன.
ரோட்டன்சிஸ் மால்வேர் சியோமி ரெட்மீ போனில் உள்ள வைஃபை சேவை ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டு, அது வைஃபை சேவையே வழங்கவில்லை என கண்டறிந்தனர். ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாத மிகப்பெரிய பட்டியலுக்கு அனுமதி கேட்கிறது. அதில் கேட்கப்பட்ட மிகமுக்கியான அனுமதி ‘DOWNLOAD_WITHOUT_NOTIFICATION’. அந்த போனை முதன்முதலில் ஓன் செய்தவுடனேயே தீங்கிளைக்கும் மென்பொருள் ஒன்று டவுன்லோட் செய்யப்படுகிறது. ரோட்டன்சிஸ் என அழைக்கப்படும் அந்த மால்வேர், மார்ஸ்டேமன் எனும் ஓபன்(Open) சோர்ஸ் ப்ரேம்வேர்க்-ஐ பயன்படுத்தி, போனில் மறைந்திருந்து செயல்படும்.
சாங்க்காய் ஏட்ஸ்அப் டெக்னாலஜி கிரிப்டோஒயர் என்ற பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்காவில் விற்கப்பட்ட பல்வேறு அண்ரய்ட் கருவிகளில் இருந்து தகவல்கள் சீனாவின் சர்வர்க்கு ஒவ்வொரு 72மணி நேரத்திற்கு ஒரு முறையும் அனுப்புவதை கண்டறிந்தனர். அண்ரய்ட் போனின் அனுமதி வழங்கும் அமைப்பில் உள்ள குறையை பயன்படுத்தி, மெசேஜ், கான்டேக்ட்ஸ், அழைப்பு விவரம், ஐஈம்இஐ எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சாங்க்காய் ஏட்ஸ்அப் டெக்னாலஜி நிறுவனம் கண்காணித்துள்ளது. ஓராண்டிற்கு பின்னரே இது கண்டுபிடிக்கப்பட்டது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.