Hard Disk பிழைகளை நீக்க இலவச மென்பொருள்.
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hard Disk ‘ல் பலவிதமான கோளாறுகள் எற்பட்டு அதனால் பிழை செய்தி காணப்படலாம். விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணினியில்தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.
சரி பிழை செய்திகள் எதனால் ஏற்படக்கூடும்?
Hard Disk ‘ல் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை கணினியில் இருந்து நீக்கி விடுவோம். நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நீங்காமல் சில File ‘கள் கணினியிலேயே தங்கிவிடும். அந்த File ‘களால் கணினியில் அடிக்கடி பிழைச்செய்தி தோன்றலாம். இதுபோன்ற பிழைச் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது. தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
பிறகு மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறந்து சோதனை செய்ய வேண்டிய டிரைவை தேர்வு செய்து, Read Only பொத்தானை அழுத்தி சோதனை செய்து கொண்டு பிழை செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.
பிழை செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த பிழை செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்துகொள்ள வேண்டும்.
இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமாகும். விண்டோஸ் 7 க்கு இது மிக சிறந்த மென்பொருளாகும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.