சமூக வலைத்தளங்கள் தொடர்பான சில சுவாரஷ்ய தகவல்கள்.
இன்று சமூக வலைத்தளங்களின் பாவனை உலகளவில் மூலை முடுக்கெங்கும் வியாபித்திருப்பதனைக்காணலாம். உலக சனத்தொகையில் 30 சதவீதமான மக்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸடாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.
இதன் படி சமூக வலைத்தளங்கள் தொடர்பாக சில சுவராஷ்யமான தகவல்களைப் பார்ப்போம்
- சமீபத்திய கணிப்பின் படி உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
- இதில் சமூக வலைத்தளங்களை 300 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
- வியாபாரங்களை மேற்கொள்வதில் 80 சதவீதமானோர், ஏதாவது ஒரு வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தினை உபயோகிக்கின்றனர்.
- கடந்த 2017ம் ஆண்டு ஆண்டில் இரண்டாவது காலாண்டில் இருந்து, 2017ம் ஆண்டின் 3ஆவது காலாண்டு வரை மட்டுமே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 12.1 கோடி ஆக அதிகரித்தது.
- அதன்படி ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இணைவதாக தெரியவந்துள்ளது.
- பேஸ்புக் மெஸேன்ஜர், வட்ஸ்அப், போன்ற செயலிகளில் தினமும் ஆறாயிரம் கோடி என்ற அளவில் குறுந்தவல்கள் பரிமாறப்படுவதாகக் கூறப்படுகின்றது.
- கடந்த 2017ம் ஆண்டு சமூக வலைதள விளம்பரங்களில் சுமார் 4,000 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருக்கின்றது.
- கடந்த 2015ம் ஆண்டு வாக்கில், உலகின் 38 சதவீத நிறுவனங்கள் சமூக வலைதள செலவினங்களை சுமார் 20 சதவீதம் வரை அத்கரித்து உள்ளன. இது சென்ற ஆண்டை விட 13 சதவீதம் அதிகமாகும்.
- டுவிட்டரில் குறிப்பிட்ட பிரேண்ட் மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்திற்குள் ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது.
- பேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள், தினமும் சராசாரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.
- Snapchat தளத்திலும் வீடியோக்கள், தினமும் அண்ணளவாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றனர்.
- 2019ம் ஆண்டு மொத்த ஒன்லைன் தரவுகளில் 74 சதவீதம் வீடியோவாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இன்று உலகளவில் பயன்படுத்தப்படும் சமூக வளைத்தளங்களினால் கலாசார சீர்கேடுகளும், மோசடிகளுமே கூடுதலாக நடைபெறுகின்றன எனவும், வாதங்கள் நடைபெறுகின்றனர்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.