இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடால் அவர்களால் கடந்த 24.02.2020 அன்று திறந்து வைக்கபட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் ஆதரவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டுவந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 42 கிலோ வோற் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.எ
ஆராய்ச்சி மற்றும் தகவல் பகிர்வு திட்டமாக இந்த திட்டம் பயன்படுத்தப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்திற்கு பயன்படுத்தப்படும்.கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இரு பல்கலைக்கழகங்களும் இந்த திட்டத்தில் செயல்பட்டு வருவதாகவும், உலக தூய்மையான எரிசக்தி துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் நோர்வே, அறிவைப் பகிர்ந்து கொள்வதிலும், தூய்மையான எரிசக்தி ஆராய்ச்சி திட்டங்களை உருவாக்க இலங்கைக்கு உதவுவதிலும் ஆர்வமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இு போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.