இலங்கையில் கைத்தொலைபேசி பாவனையாளர்களின் கவனத்திற்கு.!!! TRC இன் அவசர எச்சரிக்கை!
இலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொபைல் நிறுவனங்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன.
அத்தகையவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாங்கியுள்ள ஆனால் தற்போது பாவிக்காத பழைய சிம் அட்டைகள் இருந்தால் அவற்றை டிஅக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது உங்கள் பெயரில் சிம் அட்டைகள் எடுத்துக் கொடுத்திருந்தால் அவற்றை ஒன்றில் கென்சல் செய்து விடுங்கள் அல்லது அவரது பெயருக்கே மாற்றிக்கொடுத்து விடுங்கள்.
யாராவது நபர் ஒருவர் வெளியே நடமாடும்போது பொலிசாரால் நிறுத்திச் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.
அப்போது உங்கள் மொபைல் போனும் பரிசோதிக்கப்படலாம். உங்களுடைய போனில் உள்ள சிம் அட்டை உங்கள் பெயரில் இல்லாவிட்டாலோ, உங்கள் பர்ஸ்ஸில் வேறு பல சிம் அட்டைகள் இருந்தாலோ, உங்கள் போனில் சந்தேகத்திற்கு இடமான போட்டோக்கள், வீடியோக்கள், ஆபாசப் படங்கள், வீடியோக்கள் இருந்தாலோ உங்களுடைய கையில் உள்ள போன் உங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டும்படி கேட்ப்பட்டு நீங்கள் அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ நீங்கள் உடனடியாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட முடியும்.
உங்கள் மொபைல் போன் காணாமல் போய்விட்டால் உடனடியாக போலிஸில் முறைப்பாடு செய்து விடுங்கள்.
உங்கள் போனின் EMI Serial Number ஐக் கட்டாயம் வீட்டில் வேறாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.முன்பின் அறிமுகமில்லாத எவருக்கும் உங்கள் போனிலிருந்து தொலைபேசி அழைப்பு எடுக்கவோ மிஸ்ட் கோள் கொடுக்கவோ கொடுக்காதீர்கள்.
வில்லங்கம் வீடுதேடி வரலாம்.எங்காவது சிம் அட்டையோ மொபைல் போனோ காணப்பட்டால் எக்காரணம் கொண்டும் அவற்றைக் கையில் எடுக்காதீர்கள்.
பொலிசுக்குக் கொண்டுபோய்க் கொடுப்போமே என்ற நல்லெண்ணத்தில் கூட எடுத்து விடாதீர்கள். அதனாலும் பாரிய சிக்கல்களில் மாட்டலாம்.
எவ்வளவு இலாபமாகக் கிடைத்தாலும் அறிமுகமில்லாத எவரிடமிருந்தும் மொபைல் போன்களைக் கொள்வனவு செய்யாதீர்கள்.உங்கள் போனில் வேறொருவரது சிம் அட்டையை இட்டுப் பேச அனுமதிக்காதீர்கள்.
அதுவும் ஆபத்தானதே.அதேபோல எந்த இக்கட்டான கட்டத்திலும் உங்கள் சிம் அட்டையை அறிமுகமில்லாத ஒருவரின் போனில் இட்டும் பேசாதீர்கள்.
அங்கீகாரமுள்ள இடங்களில் மட்டுமே போன்களை வாங்குங்கள்.புதிதாக போன்கள் வாங்கும்போதும் இலங்கை TRC வில் அதாவது தொலைத்தொடர்பு ஒருங்கமைப்பு ஆணைக்குழுவின் பதிவிலக்கம் போனில் ஒட்டப்பட்டள்ளதா என்பதைக் கவனமாகப் பரிசீலித்து வாங்கிக் கொள்ளுங்கள்.
இவ்வாறு TRC யில் பதிவு செய்யப்படாத,கறுப்புச் சந்தையில் குறைந்த விலையில் விற்பனையாகும் தரமான போன்களாகவே இருந்தாலும் அவை சட்ட ரீதியானவை அல்ல.
புதிதாக சிம் அட்டைகள் வாங்கும்போதும் ஏற்கனவே ஒருவரால் பலரால் பாவிக்கப்பட்டு, கன்செல் செய்யப்பட்ட இலக்கத்தைக் கொண்ட சிம் அட்டையா என்பதை நன்கு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவ்வாறு ஏற்கனவே பாவிக்கப்பட்டுக் கென்சல் செய்யப்பட்ட சிம் அட்டை எனில் அதை வாங்காதீர்கள்.. அதனாலும் பிரச்சினைகள் எழலாம்.
சிம் அட்டைகள் வாங்கும்போதும் நம்பிக்கையான இடத்தில் வாங்குங்கள்.வாங்கும்போது உங்கள் அடையாள அட்டையின் பிரதியைக் கொடுக்க வேண்டி வரும். அந்த அடையாள அட்டைப் பிரதியின் மூலம் வேறு நபர்களுக்கும் சிம் அட்டைகள் விற்கப்பட முடியும்..
இந்த எல்லா விடயங்களிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.