உங்க கம்ப்யூட்டரில் இரண்டாவது மொனிட்டர் இணைக்க மூன்று அற்புத வழிமுறைகள்.!
வியாபார நிறுவனங்கள் மற்றும் வீட்டு கம்ப்யூட்டர்களில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மொனிட்டர்களை இணைத்து பயன்படுத்தும் வழிமுறை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மொனிட்டர்களை இணைப்பதன் மூலம் ஒரே சமயத்தில் பல்வேறு மென்பொருள்களை இயக்க முடியும். இதன் மூலம் அடிக்கடி செயலிகளிடையே மாற்ற வேண்டிய நிலை ஏற்படாது.
கம்ப்யூட்டரில் பல்வேறு மொனிட்டர்களை இணைப்பது அவ்வளவு எளிய வழிமுறை என கூறிவிட முடியாது. சில ப்ளக்களை வைத்துக் கொண்டு மட்டும் இவ்வாறு செய்துவிட முடியாது. கூடுதலாக மொனிட்டர்களை வாங்கும் முன் உங்களது கம்ப்யூட்டரில் அதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதா என்றும், உங்களது கிராஃபிக்ஸ் கார்ட் அதனை ஒத்துழைக்குமா என்ற விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
வழிமுறை 1:
வழங்கப்பட்டுள்ள போர்ட்களின் எண்ணிக்கை சரிபார்க்க வேண்டும் கூடுதலாக மொனிட்டர்களை வாங்கும் முன் உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் எத்தனை போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும். அ) HDMI
ஆ) Display Port
இ) DVI
ஈ) Thunderbolt
உ) VGA
பல்வேறு கம்ப்யூட்டர்களில் ஒன்றிற்கும் அதிகமான போர்ட்கள் வழங்கப்படுகின்றன. கம்ப்யூட்டரை சற்று உற்று நோக்கும் போது போர்ட்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும். உங்களது கம்ப்யூட்டரில் இரண்டிற்கும் அதிகமான போர்ட்கள் வழங்கப்படடு இருந்தால், வீடியோ கார்டு இரண்டிற்கும் அவுட்புட் சிக்னல் வழங்க முடியும் என தெரிந்து கொள்ளலாம். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பல்வேறு ஸ்லாட்கள் கூடுதலாக வீடியோ கார்டுகளை இணைப்பதற்காகவே வழங்கப்படுகின்றன. இதனால் உங்களது டெஸ்க்டாப்பில் ஒரே ஒரு போர்ட் மட்டும் வழங்கப்பட்டு இருந்தாலும், பின்புற கவரை நீக்கும் போது கூடுதல் ஸ்லாட்கள் வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். லேப்டாப்களில் டாக்கிங் ஸ்டேஷனை பார்க்கும் போது அதில் இரண்டிற்கும் அதிகமான போர்ட்கள் வழங்கப்பட்டு இருப்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
வழிமுறை 2:
வீடியோ கார்ட் செட்டிங்களை சரிபார்க்க வேண்டும் உங்களிடம் இரண்டு போர்ட்கள் இருந்து அவை ஒரே நேரத்தில் வேளை செய்யாமல் போனால், உங்களது வீடியோ கார்டில் பல்வேறு மொனிட்டர்களுக்கு ஒத்துழைக்கும் வசதி இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இதற்கு இரண்டு மொனிட்டர்களை ப்ளக் செய்து, ஸ்டார்ட் மெனுவில் டிஸ்ப்ளே ஒப்ஷன் தேர்வு செய்ய வேண்டும்.
இனி Change display settings ஒப்ஷனில் அட்வான்ஸ் என்ற ஒப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் இணைக்கப்பட்டுள்ள டிஸ்ப்ளேக்களை உங்களது கிராஃபிக்ஸ் கார்ட் ஒத்துழைக்கிறதா என்பதை டிஸ்ப்ளே அடாப்டர் ப்ராப்பர்டீஸ் ஒப்ஷனில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இந்த ஒப்ஷனில் ஒன்றிற்கும் அதிகமானவற்றை காண்பிக்கும் பட்சத்தில், உங்களது கார்டு பல்வேறு மொனிட்டர்களை ஒத்துழைக்கும் என தெரிந்து கொள்ளலாம். இங்கு ஒரேயொரு ஒப்ஷன் மட்டும் தெரிந்தால், உங்களது வீடியோ கார்டில் ஒரு சமயத்தில் ஒற்றை மொனிட்டரை மட்டுமே ஒத்துழைக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்களது கம்ப்யூட்டரில் இரண்டு மொனிட்டர்களை இணைக்க முடியாது.
வழிமுறை 3:
கிராஃபிக்ஸ் கார்ட் ஆய்வு உங்களது கம்ப்யூட்டரில் பல்வேறு மொனிட்டர்கள் வேலை செய்யுமா என்ற குழப்பம் இப்போதும் நீடித்தால், உங்களது கிராஃபிக்ஸ் கார்டினை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதற்கு உங்களது கிராஃபிக்ஸ் கார்ட் பற்றி நீங்கள் அதிகம் படிக்க துவங்க வேண்டும். ஸ்டார்ட் மெனுவில் டிஸ்ப்ளே மேனேஜர்ஸ் ஒப்ஷன் தேர்வு செய்ய வேண்டும். இதில் உங்களது கிராஃபிக்ஸ் கார்ட் விவரங்களை குறித்து எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பெயரை கூகுளில் டைப் செய்து அதில் பல்வேறு மொனிட்டர்களை ஒத்துழைக்கும் வசதி உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு மொனிட்டர்களை உங்களது கிராஃபிக்ஸ் கார்ட் ஒத்துழைக்குமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.