விளம்பர மோசடியில் ஈடுபட்ட கிளீன் மாஸ்டர் அப்ஸ் !
சீன அப்ஸ் மேம்பாட்டாளர்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட அண்ட்ரய்ட் அப்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களே இந்த விளம்பர மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்ஸ் பகுப்பாய்வு நிறுவனம் 2 மில்லியனுக்கு மேல் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்யப்பட்ட 8 அப்கள் இதில் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளது.
சீன இணையதள நிறுவனமான சீட்டா மொபைலிலிருந்து 7 அப்ஸ்களும், மற்றொரு சீன நிறுவனமான கிகா டெக்கிலிருந்து மற்றொரு அப்ஸ்வும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.
கோச்சாவா அப்ஸ் பகுப்பாய்வு நிறுவனம் Buzzfeed உடன் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, இந்த இரு நிறுவனங்களும் பயனாளர்களிடம் அப்ஸ்கள் கேட்கும் அனுமதியை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது.
சீட்டாவினால் உருவாக்கப்பட்ட கிளீன் மாஸ்டர், சி.எம் ஃபையில் மேனேஜர், சிஎம் லான்சர் 3டி, செக்கியூரிட்டி மாஸ்டர், பேட்டரி டாக்டர், சிஎம் லாக்கர் மற்றும் சீட்டா கீபோர்ட் இதில் உள்ளடங்கும். அப்ஸ் பிரைன் நிறுவனம் கூறுகையில், கடந்த 30 நாட்களில் 20 மில்லியன் முறை இந்த அப்ஸ்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சி.எம் லான்சர் 3டி அப்ஸ்யினை கூகுள் புரமோட் செய்ததாகும். விளம்பர மோசடியில் ஈடுபட்ட மற்ற அப்ஸ் கிகா கீபோர்ட் ஆகும். இதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் 60 மில்லியன் மாத வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து ஒருமாத கால விசாரணைக்கு பின் வெளியாகியுள்ள அறிக்கையின் படி, 125 அண்ட்ரய்ட் அப்ஸ்கள் விளம்பர வருவாய் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் தற்போது கூகுள் தனது பிளே ஸ்டோரிலிருந்து 125 அண்ட்ரய்ட் அப்ஸ்களை நீக்க உள்ளது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.