இரகசிய சட்! வட்ஸ்ஆப்பை இழுத்து மூடிவிட்டு டெலிகிராமுக்கு போக வேண்டுமா?
என்னுடைய தங்கைக்கு அடிக்கடி முகம் தெரியாத மொபைல் எண்ணில் இருந்து மெசேஜ் வந்து கொண்டே இருந்தது. போகப்போக மிஸ்டு கால் விட்டு கட் பண்ணும் முயற்சி தொடரவே, “அண்ணா இந்த நம்பர்ல இருந்து, மெசேஜ் வர ஆரம்பிச்சதுல இருந்து ஒரே டார்ச்சரா இருக்கு, எப்படி என் நெம்பர் கிடைச்சுதுனே தெரியல, கொஞ்சம் பார்த்து சொல்லுவேன்” என்று என்னிடம் கேட்டாள். முதலில் யாராக இருக்கும் என்று true caller ஆப் வைத்து தேடி பார்த்த பொழுது, ஏதோ பரிட்சயம் இல்லாத ஒரு பெயரை காட்டியது.
என் தங்கை சமீபத்தில் தான், பட்டன் போனில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு மாறினாள் என்பதால், தெரியாமல் ஏதாவது நெம்பரை பதிவிட்டு இருக்கிறாளா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் முழுக்க மண்டையை குடைந்து தேடி பார்த்ததில், சமீபத்தில் ஒரு வாட்ஸ்-ஆப் குரூப்பில், என் தங்கையை அவளது தோழிகள் இணைத்திருக்கின்றனர். அது அரட்ட குரூப்பாம். “ஓபன் பண்ணி பாரு டைம் பாஸ் ஆகும்டி” என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் இருந்தே தங்கையின் மொபைல் நம்பர் கசிந்திருக்கிறது.
எவனோ ஒருவன், குரூப்பில் இருந்து, பெண்களின் எண்களை மட்டும் தேடி எடுத்து, வலைவீசி பார்த்திருக்கிறான். என் தங்கையின் தோழிகளுக்கும், அந்த எண்ணில் இருந்து மெசேஜ் சென்றிருக்கிறது. அதிலிருந்து சுதாரித்துக்கொண்டு, இப்போ டெலிகிராம் செயலிக்கு மாறிவிட்டோம். ஏன் வாட்சப்பைவிட டெலிகிராம் ஆப் சிறந்தது? என்று தெரிந்தால், மலைத்து போயிருவோம். டெலிகிராமில் மொபைல் எண் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் தவிர, புதியவர்கள் யாரும் பார்க்க முடியாது, பெண்களுக்கு பாதுகாப்பானது.
2 லட்சம் உறுப்பினர்கள் ஒரு குரூப்பில் இணையலாம். கிளவுட் டெக்னாலஜி மெமரியில் இயங்குவதால் உங்கள் போனில் டெலிகிராமில் வரும் படம், வீடியோ பகிர்வால் அதிக மெமரி எடுக்காது, ரகசியமாக சேட் செய்யலாம், தகவல் சர்வரில் தங்காது. எல்லா வித போன் சாப்ட்வேருடன் இயங்கும், செயல்படும் வேகம் அதிகம், ஒரு நம்பரை வச்சு எத்தனை போனில் வேனும் என்றாலும், டவுன்லோடு செய்து கொள்ளலாம். 5 ஜிபி உள்ள பெரிய பைலாக இருந்தாலும், அப்லோடு செய்து கொள்ளலாம். வாட்சப் போல நமக்கு வரும் வீடியோ, படங்கள் மூலமாக வைரஸ் பரப்பபட்டு நமது தகவல்களை திருடப்படுவதில்லை. ரஸ்ய நாட்டு செயலியான டெலிகிராமில் நமது தகவல்கள் விற்கபடுவது இல்லை. பாதுகாக்கப்படுகிறது.