WhatsApp தொடர்பான சில தகவல்கள்.!
வாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அவைகளில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.
வாட்ஸ் அப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்..
ஆர்ச்சிவ் சட்(Archive chat)
இந்த அம்சம் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சட்டினை தற்காலிகமாக மூடி வைத்து அதனினை பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை மேற்கொள்ள நீங்கள் மறைக்க விரும்பும் சட்டினை அழுத்தி பிடித்து ஆர்ச்சிவ் சட் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
ம்யூட் க்ரூப் சட் (Mute Group chat)
சில சமயங்களில் க்ரூப் சட்களின் நோட்டிபிகேஷன்கள் வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Menu button – Mute Button – Group Name – ஐ க்ளிக் செய்யலாம்.
லாஸ்ட் சீன் (Last seen)
நீங்கள் கடைசியாக வாட்ஸ் அப் பயன்படுத்திய நேரத்தினை வாட்ஸ் அப் தானாகவே காண்பிக்கும், இதை நிறுத்த Settings– Account — Privacy –Last seen Option- ஐ க்ளிக் செய்து Nobody என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
ஷார்ட்கட் (Shortcut)
சாட் மெனுவினை அழுத்தி பிடித்தால் அவை ஷார்டகட்டாக ஹோம் ஸ்கிரீனில் தெரியும். ஒரு வேலை சைனோஜென் இயங்குதளத்தினை பயன்படுத்தினால் செயலியை டிராக் செய்து தனி ஃபோல்டரில் பாஸ்வேர்டு செட் செய்தும் வைத்து கொள்ளலாம்.
ஒட்டோ டவுன்லோடிங் (Auto Downloading)
வாட்ஸ் அப் மீடியா ஃபைல்கள் தானாக டவுன்லோடு ஆவதை தடுக்க செட்டிங்ஸ் — சாட் செட்டிங்ஸ் — மீடியா ஒட்டோ டவுன்லோடு என்ற ஒப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.
குறுந்தகவல் (Message)
நீல நிற அம்பு குறி தெரிந்தால் உங்களது குறுந்தகவல் படிக்கப்பட்டு விட்டது என அர்த்தமாகும், ஆனால் சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.
பேக்கப் (Backup)
வாட்ஸ்அப் சாட்களை பேக்கப் செய்ய Settings–chat settings– backup conversation Option – ஐ க்ளிக் செய்தால் போதுமானது.
லாக் வாட்ஸ்அப் தகவல்களை பாதுகாப்பாக வைக்க சந்தையில் கிடைக்கும் செயலிகளை கொண்டு வாட்ஸ் அப் செயலியை லாக் செய்து கொள்ளலாம்.
புகைப்படங்கள் (Photos)
வாட்ஸ் அப் புகைப்படங்களை கேலரி அல்லது கமெரா ரோலில் வைத்து கொள்வது சில சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். அவ்வாறானவர்கள் புகைப்படங்களை வாட்ஸ்அப் செயலி மூலம் மறைத்து வைத்து கொள்ளலாம்.
போன் நம்பர் (Phone number)
சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம், மாற்றாக Settings — Account — Change Number Option-ல் புதிய நம்பரை என்டர் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies./div>