எளிதில் ஹேக் செய்யப்படும் WhatsApp; பயனர்களுக்கு எச்சரிக்கை!
வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்கள் எம்பி4 வகை வீடியோக்களை அனுப்புவதன் மூலம் ஹேக்கர்களால் திருடப்படும் அபாயம் உள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது!!
தற்போது வாட்ஸ்அப் உலகளாவிய ரீதியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உடனடி செய்தி சேவை ஆகும். வாட்ஸ்அப்-ல் தற்போது நிறைய அப்டேட்களை செய்து வருகிறது. இதனால், பயனர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில், வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்கள் MP4 வகை வீடியோக்களை அனுப்புவதன் மூலம் ஹேக்கர்களால் திருடப்படும் அபாயம் உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, தகவல்கள் திருட்டு குறித்து, வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பாக சம்பவங்களுக்கு இந்திய ஒப்புதல் கழகம், வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய கணினி அவசரகால பதிலளிக்கும் குழு (Indian Computer Emergency Response Team-CERT-In) விடுத்துள்ள எச்சரிக்கையில், வாட்ஸ்அப் பயனாளர்கள் செய்யும் சிறிய தவறுகளால் ஹேக்கர்களால் எளிதில் அவர்களின் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனிற்குள் புகுந்து, அதை ரிமோட் மூலம் அவர்களால் இயக்க முடியும்.
பொதுவாக MP4 பைல்கள் மூலமே வாட்ஸ்ஆப்பிற்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகிறார்கள். MP4 பைல் என்பது வீடியோ, ஆடியோ மற்றும் டாக்குமென்ட் பைல்களை உள்ளடக்கியது. இந்த MP4 பைல்களை வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களால் டவுண்லோட் செய்யப்படும் போதும் மட்டுமே, மால்வேர்களை பயன்படுத்தி ஹேக்கர்களால் உள்ளே நுழைய முடியும். வாட்ஸ்அப்பில் உள்ள இந்த பாதுகாப்பு ஓட்டையை வைத்து பயனாளர்களின் மொபைல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை உளவு பார்ப்பதுடன். முக்கிய தகவல்களையும் திருடுகிறார்கள். இந்த சைபர் தாக்குதலை எப்படி கண்டறிவது என்ற விவரத்தை வெளியிடாத ஃபேஸ்புக் நிறுவனம், இதிலிருந்து தற்காலிகமாக தற்காத்துக்கொள்ள பயனாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று செயலியை அப்டேட் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து வாட்ஸ்அப் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு சிக்கலுக்கு ஆளாகக் கூடிய வாட்ஸ்அப் பதிப்புகள்:
WhatsApp for Android prior to 2.19.274
WhatsApp for iOS prior 2.19.100
WhatsApp Enterprise Client prior to 2.25.3
WhatsApp for Windows Phone prior to 2.18.368
WhatsApp Business for Android prior to 2.19.104
WhatsApp Business for iOS prior 2.19.100
இந்த சைபர் தாக்குதலை எப்படி கண்டறிவது என்ற விவரத்தை வெளியிடாத ஃபேஸ்புக் நிறுவனம், இதிலிருந்து தற்காலிகமாக தற்காத்துக்கொள்ள பயனாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று செயலியை அப்டேட் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து வாட்ஸ்அப் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.