வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்துவது எப்படி?
குறிப்பாக இந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் கைரேகை சென்சரை பயன்படுத்துவதின் மூலம் உங்களின் வாட்ஸ்ஆப் செயலி திறக்கும்.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கைரேகை ஸ்கேனரை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்ற்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போது வரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி நீங்கள் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.221-ஐ வைத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கவில்லை என்றால், இதைப் பெற வாட்ஸஆப் அப்டேட் செய்ய வேண்டும், தற்போது வரையிலாக வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் மட்டுமே இந்த வசதி கிடைக்கறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதியை உங்கள் வாட்ஸ்ஆப் செயிலில் பயன்டுத்திய பிறகு, பின்னர் வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளை எடுக்க நீங்கள் அன்லாக் செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். மேலும் மெசேஜ் ரிப்ளையை பொறுத்தவரை வழக்கம் போல வாட்ஸ்ஆப்பிற்க்குள் நுழையாமலேயே பதில் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த கைரேகை ஸ்கேனர் வசதி பொறுத்தவரை எப்போதெல்லாம் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யம் விருப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி மெசேஜ் அனுப்புவதற்கு அன்லாக் செய்ய வேண்டிய நிலை வந்தால், கண்டிப்பாக அது அனைவருக்கும் எரிச்சலூட்டும், எனவே உங்களுக்கு மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால், Immediately, after 1 minute or after 30 minutes போன்ற விருப்பங்கள் ஆகும்.
இந்த வசதியுடன் வரும் மற்றொரு அம்சம் என்னவென்றால், உங்களுக்கு வரும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களின் Notification bar ஆனது காட்சிப்படலாமா வேண்டாமா என்பதை நீங்களே தேர்வு செய்யலாம். மேலும் விரைவில் பல்வேறு புதிய வசதிகளை கொண்டுவர வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.