மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் அம்சம்: வெர்ஷன் 2.19.353-ல் கிடைக்கிறது.! ஆனால் ஒரு சிக்கல்.!
வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, அதேசமயம் இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
அதன்படி வாட்ஸ்ஆப் பயனர்கள் நீண்டநாள் மிகவும் எதிர்பார்த்த டார்க் மோட் (Dark mode) அப்டேட் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில் பீட்டாவெர்ஷனில் (வெர்ஷன் 2.19.353) இந்த டார்க் மோட் வசதி கிடைக்கத் துவங்கியுள்ளது.
WABetaInfo என்ற வலைதளத்தின் அறிவிப்பில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் டார்க் மோடு அப்டேட் வெளியிடப்பட்டால் அதில் பேட்டரி சேவர் மோடு, டார்க் மோடு, லைட் மோடு என மூன்று வெவ்வேறு ஆப்ஷன்களை உடையதாக இருக்கும் எனத் தெரிகிறது.
இருந்தபோதிலும் இப்போது வழங்கப்பட்ட அப்டேட்-இல் ஒரு சிக்கல் உள்ளது, அது என்னவென்றால், சமீபத்திய பீட்டா பதிப்பில் காணப்பட்ட பேட்டரி சேவர் மோட் விருப்பமானது ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு கீழ் உள்ள பதிப்புகளை கொண்ட பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஆண்ட்ராய்டு 10பதிப்பு பயனர்களுக்கு இந்த பதிப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் ஆண்ட்ராய்டு 10 பயனர்களுக்கு ரு வழி உள்ளது, சமீபத்திய ஆண்ட்ராய்டு 10ஒஎஸ்-ல் சிஸ்டம் டீபால்ட் விருப்பம் இருக்கும். அதன்படி உங்களிடம் ஆண்ட்ராய்டு 10 கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் இருப்பின் அதில் நீங்கள் டார்க் தீமை இயக்கினால், உங்கள் வாட்ஸ்ஆப் ஆனது டார்க் மோட் பயன்முறையில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டார்க் மோட் அம்சம் மிகவும் அடர்த்தியான சாம்பல் நிறத்துடன் கூடிய பின்னணியுடன் வெள்ளை நிற எழுத்துகள் இருக்கும் எனவும், இதே லைட் மோட் ஆப்ஷனில் டார்க் மோடில் உள்ள அடர்த்தியைவிட சிறுது குறைவாக இருக்கும் என தெரிகிறது. இந்த வகை வசதிகளை நாம் ட்விட்டரின் டார்க் மோட் ஆப்ஷனில் dim, lights out என பார்த்திருப்போம்.
மேலும் இப்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் டார்க் மோட் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் மட்டுமே அணுக கிடைக்கிறது, எனவே பொது தளத்தில் இந்த அப்டேட்டை காண முடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம், அது விரைவில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த அம்சத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி பற்றிய எந்த விதமான தகவலும் இல்லை, மேலும் இந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களுக்கு தகுந்த பல்வேறு புதிய புதிய அம்சங்களை வெளியிட தயார் நிலையில் உள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.