வட்ஸ் அப் வெப் சேவையில் டார்க் மோட் வசதி அறிமுகம்.
வட்ஸ்அப் வெப் சேவையில் ஒருவழியாக டார்க் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் ஏற்கனவே அண்ட்ரோய்ட் மற்றும் ஐஒஎஸ் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், வட்ஸ்அப் வெப் தளத்தில் இதுவரை டார்க் மோட் வசதி வழங்கப்படாமல் இருந்தது.
இதற்கு ஸ்மார்ட்போனில் வட்ஸ்அப் செயலியை திறந்து வட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கணினியில் வட்ஸ்அப் வெப் வலைதளம் திறந்து அதிலுள்ள கியூ ஆர் கோடினை ஸ்மார்ட்போன் கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும்.
இந்நிலையில், வட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதியை வழங்கி உள்ளது. முன்னதாக இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. வட்ஸ்அப் வெப் தளத்தில் உடனே டார்க் மோட் வசதியை பயன்படுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
படி 1 – கம்பியூட்டரில் வட்ஸ்அப் வெப் தளம் திறந்ததும், செட்டிங்ஸ் பேனலில் தீம் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 2 – இப்போது, மேலே உள்ள மூன்று-புள்ளி ஐகன்களைத் அழுத்தி, செட்டிங்ஸ் (Settings) பகுதிக்கு செல்லவும்.
படி 3 – செட்டிங்ஸ் பகுதியில் செட்ஸ் பகுதியை (Chats) தெரிவு செய்து அதில் டார்க் (Dark),லைட் (Light) மற்றும் சிஸ்டம் டிபோல்ட் (System Default) ஆகிய மூன்று அம்சம்கள் இருக்கும்.
படி4- டார்க் (Dark) அம்சத்தை தெரிவு செய்து இருண்ட பயன்முறைக்கு நுழையும். அதே செயல்முறையைப் பின்பற்றி, டார்க் (Dark) என்பதற்கு பதிலாக லைட் (Light) என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் சாதாரண பயன்முறைக்கு திரும்பலாம்.
வட்ஸ்அப் செயிலியின் புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் பயனர்களுக்கு வழங்கப்படும் என வட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வட்ஸ்அப் வெப் பதிப்பில் டார்க் மோட் வசதி தவிர, வட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், QR கோட் மூலம் காண்டாக்ட்களை சேர்க்கும் வசதி, வீடியோ அழைப்புகளில் அதிகபட்சம் 8 பேருடன் உரையாடும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.