புத்தம் புதிய விண்டோவ்ஸ் 10 : இந்த ஐந்து அம்சங்கள் பற்றி தெரியுமா?
விண்டோவ்ஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் சாதனங்களுக்கான புதிய அப்டேட் வழங்கும் பணிகளை மைக்ரோசொஃப்ட் துவங்கியது. விண்டோவ்ஸ் 10 மே 2018 அப்டேட்-இல் அந்நிறுவனம் ஒட்டுமொத்த திறனையும் மேம்படுத்துவதோடு, செயலிகளை இதுவரை இல்லாத அளவு அதிக பயனுள்ளதாக மாற்றுகிறது. இதுமட்டுமின்றி பாதுகாப்பு சார்ந்த புதிய வசதிகளும் புதிய அப்டேட்- இதில் இடம்பெற்றிருக்கிறது.
குரல் கொடுத்தால் வார்த்தைகளை அச்சடிக்கும் புதிய அம்சசத்துடன் கிடைக்கும். மே 2018 விண்டோஸ் 10 அப்டேட் 2016-ம் ஆண்டுகளில் இருந்து பார்க்கும் போது மிகப்பெரிய அப்டேட் ஆக இருக்கிறது. அந்த வகையில் விண்டோவ்ஸ் 10 மே 2018 அப்டேட் வழங்கும் முக்கிய அம்சங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அப்டேட் கணினி வேகத்தை குறைக்காது :
கணினிகளை அப்டேட் செய்யும் போது இருந்து வந்த மிகப்பெரிய பிரச்சினைகளில் கணினியின் வேகம் குறைவது தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது. இந்த பிரச்சினையை அறிந்து கொண்டிருக்கும் மைக்ரோசொஃப்ட் டவுன்லோட்களை பெக்ரவுன்டில் இயக்கும் வசதியை வழங்குகிறது. இது முற்றிலும் சிறந்த தீர்வாக இல்லாத நிலையில், புதிய விண்டோவ்ஸ் 10 மே 2018 அப்டேட் கணினிகளை எதிர்காலத்தில் வேகம் குறையாமல் பார்த்து கொள்ளும்.
உங்களது கணினி வேகம் குறையாமல் பார்த்து கொள்ள கம்ப்யூட்டரின் செட்டிங்ஸ் — அப்டேட் & செக்யூரிட்டி — அட்வான்ஸ் ஒப்ஷன்ஸ் (Settings > Update & Security > Advanced options) ஒப்ஷன்களை கிளிக் செய்து டெலிவரி ஒப்டிமைசேஷன் — அட்வான்ஸ் ஒப்ஷன்ஸ் மெனுவை கிளிக் செய்ய வேண்டும். (Delivery Optimization > Advanced Options)
இனி அப்டேட்டை டவுன்லோட் செய்ய எத்தனை அளவு பேன்ட்வித் செலவழிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். இதே போன்று அப்டேட்கள் ஃபோர்கிரவுன்டில் டவுன்லோட் செய்து வைக்க முடியும்.
ஏர்-டிராப் போன்ற நியுர்பை ஷேரிங் :
அப்பிளின் ஏர்-டிராப் அம்சம் போன்றே விண்டோவ்ஸ் 10 இன் புதிய நியுர்பை ஷேரிங் அம்சம் வாடிக்கையாளர்களை புகைப்படம், வீடியோ, டொகியுமென்ட்கள் மற்றும் இணையத்தளங்கள் உள்ளிட்டவற்றை வைபை அல்லது ப்ளூடூத் மூலம் பகிர்ந்து கொள்ள வழி செய்யும்.
மைக்ரோசொஃப்ட் எட்ஜ் இணையப்பக்கத்திலோ அல்லது புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள அருகில் உள்ள ஷேர் செய்யக்கோரும் ஒப்ஷனை கிளிக் செய்தால் போதும். வெறும் வலது புற கிளிக் செய்தும் இந்த வசதியை பெற முடியும்.
ஒப்ஷனை கிளிக் செய்ததும் உங்களின் கம்ப்யூட்டர் பகிர்ந்து கொள்ள ஏதுவான வேகமான வழிமுறையை தேர்வு செய்து கொள்ளும் என மைக்ரோசொஃப்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஷேர் டூல் அருகில் உள்ள சாதனங்களையும் கண்டறியும் திறன் கொண்டுள்ளது.
கஸ்டமைஸ் ஓடியோ செட்டிங் :
மைக்ரோசொஃப்ட்-இன் புதிய மே 2018 விண்டோஸ் 10 அப்டேட் ஓடியோ அனுபவத்தை மேம்படுத்தவும் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதனால் ஓடியோ செட்டிங்ஸ் சென்று வெவ்வேறு செயலிகளில் ஓடியோ அனுபவத்தை கஸ்டமைஸ் செய்ய முடியும்.
சேர்வன்ட் போன்ற செயலிகள் அதிகப்படியான ஓடியோவை ஸ்பீக்கர்களில் வழங்கும் திறன் கொண்டிருக்கும். சில பிரவுசர்களின் ஓடியோ தரம் ஹெட்போன்களில் அதிகளவு வெளிப்படாது. அந்த வகையில் ஓடியோ செட்டிங்ஸ் மூலம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் உள்ள அனைத்து செயலிகளிலும் ஓடியோவை மேம்படுத்த முடியும்.
சிறப்பாக ஸ்கேல் செய்யப்பட்ட செயலிகள் :
குறிப்பிட்ட சாதனத்தின் ரெசல்யூஷனுக்கு ஏற்ப செயலிகளை கஸ்டமைஸ் செய்யும் வசதியை புதிய அப்டேட் வழங்குகிறது. இதனை இயக்க செட்டிங்ஸ் — சிஸ்டம் — டிஸ்ப்ளே — அட்வான்ஸ் ஸ்கேலிங் செட்டிங்ஸ் ஒப்ஷன் சென்று Let Windows try to fix apps so they’re not blurry ஒப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஒப்ஷன் செயலிகளை உங்களது சாதனத்தின் ரெசல்யூஷனுக்கு ஏற்ப சரியாக ஸ்கேலிங் செய்யும்.
மேம்படுத்தப்பட்ட கேமிங் :
வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து கேம் பார் ஒப்ஷன்களை மைக்ரோசொஃப்ட் மேம்படுத்துகிறது. கேம் பாரில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய பட்டன்களில் தீம்ஸ்களை தேர்வு செய்து விருப்பமான ஒப்ஷன்களை எடிட் செய்ய முடியும் என மைக்ரோசொஃப்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது கணினியில் உள்ள தீம்ஸ்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான தீம்ஸ்களை தேர்வு செய்ய முடியும். எவ்வித கூடுதல் வன்பொருள் அல்லது மென்பொருள் இன்றி மிக்சர் ஸ்ட்ரீமினை பயன்படுத்த முடியும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.
[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.